டீசரின் வெற்றிக்கு பின்னர் எகிறும் 'விவேகம்' வியாபாரம்

  • IndiaGlitz, [Friday,May 12 2017]

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் டீசர் நேற்று அதிகாலை வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் புயலை கிளப்பியது என்பதை பார்த்தோம். அஜித் ரசிகர்களிடம் இருந்து மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களிடம் இருந்தும் இந்த டீசருக்கு வரவேற்பு கிடைத்ததால் இந்த படத்தின் டீசருக்கு பார்வையாளர்கள் மற்றும் லைக்ஸ்-இல் புதிய சாதனை படைத்தது.
இந்த நிலையில் டீசரின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் இந்த படத்தின் வியாபாரம் மிகப்பெரிய அளவில் எகிறியுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருகின்றது. இதுவரை கிடைத்த தகவலின்படி இந்த படத்தின் தமிழக உரிமை ரூ.55 கோடி வரை வியாபார பேரம் நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொகை ரஜினி படத்தை அடுத்து மிகப்பெரிய தொகை என்பது குறிப்பிடத்தக்கது
வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படத்தில் அஜித் சர்வதேச காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். மேலும் காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். 'வீரம்', 'வேதாளம்' படங்களை அடுத்து அஜித்துடன் மீண்டும் இணைந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

More News

முதல்வருடன் விஷால் உள்பட முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால், மத்திய,மாநில அரசுகளுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்தார்.

விஷாலின் வேலைநிறுத்த போராடத்திற்கு முழு ஒத்துழைப்பு கிடைக்குமா?

நடிகர் சங்க செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மத்திய மாநில அரசுகளுக்கு வைத்த கோரிக்கை கவனிக்கப்படாமல் இருப்பதால் வரும் ஜூன் 1 முதல் திரையுலகினர்களின் ஒட்டுமொத்த வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

'அவதார்' சாதனை முறியடிகும் நாள் நெருங்கிவிட்டதா? தமிழ் சினிமாவில் பரபரப்பு

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த 28ஆம் தேதி வெளியாகி வசூலில் சாதனை செய்து வருகிறது.

உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்முறையாக கிடைத்த உற்சாகம்

உதயநிதி ஸ்டாலின், ரெஜினா நடித்த 'சரவணன் இருக்க பயமேன்' திரைப்படம் இன்று வெளியாகவுள்ளது.

மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையில்லை. பிளஸ் 2 மாணவர்களுக்கு சிவகார்த்திகேயன் அறிவுரை

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகவுள்ளது.