அரசியல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அஜித்
- IndiaGlitz, [Friday,January 08 2016]
கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் வேட்பாளராக இருந்த நரேந்திரமோடி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்தபோது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இளையதளபதி விஜய் ஆகியோர்களை சந்தித்து ஆதரவு கேட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடி, அஜித்தை சந்திக்கவுள்ளதாகவும், அஜித் விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாகவும் ஒருசில இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் நேற்று பரபரப்பாக செய்திகள் வெளியாகியது.
இந்நிலையில் இந்த செய்திக்கு அஜித் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பல அரசியல் கட்சிகள் அஜித்தை தங்கள் கட்சியில் சேருமாறு அழைப்பு விடுப்பது உண்மைதான் என்றும், ஆனால் அஜித் தற்போது எந்த ஒரு அரசியல் கட்சியிலும் சேரப்போவதில்லை என்றும், அவர் எந்த பிரமுகர்களையும் சந்திக்கும் திட்டத்தில் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனால் அஜித் பாஜகவில் இணையப்போகிறார் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.