'வேதாளம்' கன்னட ரீமேக்கில் சூப்பர் ஸ்டார்

  • IndiaGlitz, [Friday,January 08 2016]


தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த தீபாவளி தினத்தில் வெளியான 'வேதாளம்' திரைப்படம் சூப்பர்ஹிட் ஆகி ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த படத்தை கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இந்த படத்தின் கன்னட ரீமேக் உறுதியாகியுள்ளது.

தமிழில் 'வேதாளம்' படத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னம் அவர்களே கன்னடத்திலும் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார். அஜித் வேடத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் புனித்ராஜ்குமார் நடிக்கும் இந்த படத்தை கன்னட ரீமேக் ஸ்பெஷலிஸ் நந்தா கிஷோர் இயக்கவுள்ளார்.ஸ்ருதிஹாசன் மற்றும் வில்லன் வேடங்களில் நடிக்க நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 'வேதாளம்' திரைப்படம் தமிழில் ரிலீஸ் ஆன அதே தேதியில் தெலுங்கிலும் ரிலீஸ் ஆனபோதிலும் இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

More News

தனுஷ்-பிரபுசாலமன் படத்தின் மிரட்டலான டைட்டில்

தங்கமகன்' படத்தை அடுத்து பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ள இன்னும் பெயரிடப்படாத 'படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது....

அரசியல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அஜித்

கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் வேட்பாளராக இருந்த நரேந்திரமோடி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்தபோது...

மிருதன்' பட டிராக்லிஸ்ட் வெளியீடு

2015ஆம் ஆண்டின் கோலிவுட் வெற்றி நாயகன் ஜெயம் ரவி நடித்த 'மிருதன்' படத்தின் டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றது...

பிறந்த நாளில் வெள்ள நிவாரண நிதியளித்த சரோஜாதேவி

கன்னடத்து பைங்கிளி என்று அழைக்கப்படும் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்....

வியாபாரத்தில் ஒன்றிணைந்தது ரஜினி-விஜய் படங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கி வரும் 'கபாலி' திரைப்படம் மற்றும் இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'தெறி' திரைப்படம் ஆகிய இரண்டு படங்களையும் பிரபல முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே...