முதல் முறையாக 'பான்-இந்தியா' திரைப்படமாகும் அஜித் படம்: பரபரப்பு தகவல்
- IndiaGlitz, [Wednesday,July 29 2020]
தற்போது பல பிரபல நடிகர்களின் படங்கள் ’பான்-இந்தியா’ திரைப்படமாக உருவாகி வருகிறது என்பது தெரிந்ததே. பல மொழிகளில் ஒரே நேரத்தில் திரையிட்டால் வசூலை குவிக்கலாம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் இந்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன
இந்த நிலையில் தற்போது தல அஜித்தின் ’வலிமை’ திரைப்படமும் ’பான்-இந்தியா’ திரைப்படமாக உருவாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தமிழில் மட்டும் உருவாகி வரும் ’வலிமை’ படத்தை இந்தியில் டப்பிங் செய்ய தயாரிப்பாளர் போனி கபூர் முடிவு செய்துள்ளதாகவும் இதனை அடுத்து தேர்ந்த டப்பிங் கலைஞர்களை டப்பிங் பணிகளில் ஈடுபட வைத்து, அசல் இந்தி படம் போல் மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
ஏற்கனவே ஸ்ரீதேவியின் ’இங்கிலீஷ் இங்கிலீஷ்’ உள்ளிட்ட ஓரிரு இந்தி படங்களில் அஜித் நடித்திருந்தாலும் தற்போது ஹீரோவாக அஜித் நடித்த ஒரு திரைப்படம் ஹிந்தியில் டப் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ஹிந்தி மட்டுமின்றி ஒருசில தென்னிந்திய மொழிகளிலும் இந்த படத்தை டப் செய்ய போனிகபூர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த பணிகள் படப்பிடிப்பு முடிந்தவுடன் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது
2021 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஊரடங்கு முடிந்தவுடன் அடுத்த கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அஜித்தின் ’வலிமை’ திரைப்படம் ’பான்-இந்தியா’ படமாக உருவாக இருக்கும் செய்தி அஜித் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது