தல அஜித்தின் அட்டகாசமான 'வலிமை' மோஷன்போஸ்டர்!

  • IndiaGlitz, [Sunday,July 11 2021]

தல அஜித் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாக இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது என்பதும், இது குறித்த ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சற்று முன்னர் ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. அட்டகாசமான, ஸ்டைலிஷ் தோற்றத்தில் தல அஜித் இருக்கும் இந்த மோஷன் போஸ்டர் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அட்டகாசமான தோற்றத்தில் இருக்கும் அஜித்தை அவரது ரசிகர்கள் ரசித்து வருகின்றனர் என்பதும், யுவன் சங்கர் ராஜாவின் அற்புதமான பின்னணி இசையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘வலிமை’ மோஷன் போஸ்டர் அஜித் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் ‘வலிமை’ திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என்று இந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.