'தல' என்ற தாரக மந்திரம்தான் பல படங்களின் புரமோஷன் எந்திரம்
- IndiaGlitz, [Monday,August 17 2015]
'தல' என்ற வார்த்தைக்கு மயங்காத திரையுலக ரசிகர்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு அந்த மந்திர சொல் அனைவரையும் இழுத்துள்ளது. அஜீத்தின் படங்களை பிடிக்காதவர்கள் கூட அவரை நல்ல மனிதர்' என்ற அளவில் ஏற்றுக்கொள்வதுண்டு.
இந்நிலையில் அஜீத் நடித்த படங்கள் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டுதான் வெளிவருகின்றது. ஆனால் பல படங்கள் அஜீத்தை நம்பியே வெளிவருகின்றது என்பதுதான் உண்மை. இன்றைய இளையதலைமுறை நடிகர்கள் தங்களை புகழ்வது போல் காட்சிகளை வைக்கின்றார்களோ இல்லையோ, அஜீத்தை புகழ்வது போல் கட்டாயம் காட்சிகளை வைக்கின்றனர்.
உதாரணத்திற்கு கடந்த வாரம் வெளிவந்த சிம்புவின் 'வாலு' படத்தை கூறலாம். மங்காத்தா, வீரம் ஸ்டைலில் சிம்பு மேக்கப் போட்டு ஆடுவது, பல காட்சிகளில் பின்னணியில் அஜீத் போஸ்டர் இருக்கும்படி பார்த்துக்கொண்டது, சிம்பு-ஹன்சிகா படம் பார்க்கும் தியேட்டரில் பில்லா படத்தை ஓட்டுவது, ஆங்காங்கே அஜீத்தின் பல படங்களின் பிஜிஎம் பயன்படுத்தியது என்றே சொல்லலாம். அஜீத் சம்பந்தப்பட்ட இந்த காட்சிகளில் தியேட்டரில் விசில் சத்தம் விண்ணை பிளந்தது என்பது உண்மை.
அதேபோல் ஆர்யா நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் 'யட்சன்' படத்தின் ஆர்யாவின் கேரக்டரே அஜீத் ரசிகர் கேரக்டர்தான். யட்சன் டிரைலரிலேயே 'தல படம் ரிலீஸ் ஆவது, தூள் கிளப்பணும் என்ற வசனம்தான் இடம்பெற்றுள்ளது.மேலும் அஜீத்தின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருப்பதால் அஜீத்தின் ரசிகர்கள் இந்த காட்சிகளில் அடிக்கப்போகும் விசில்கள் இப்போதே காதில் கேட்கிறது.
அஜீத், தான் நடிக்கும் எந்த படங்களின் புரமோஷனுக்கு வரமாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் பல படங்களை தனக்கே தெரியாமல் புரமோஷன் செய்து கொண்டு இருக்கின்றார் என்பதுதான் உண்மை. அவரது படங்களின் ஆடியோ ரிலீஸ் கூட பிரமாண்டமான விழா அமைத்து வெளியிடுவதில்லை. சமூக இணையதளத்தில் வெளியிட்டாலே போதும், மற்ற புரமோஷன் பணிகளை அவரது ரசிகர்கள் பார்த்துக்கொள்வார்கள். இவை அனைத்துமே 'தல' என்ற ஒரே ஒரு மந்திர சொல்லில் அடங்கியிருக்கும் கோடானு கோடி ரசிகர்களால்தான் என்பது மட்டும் உண்மை. தல என்ற ஓரே ஒரு மந்திர வார்த்தை தான் பல படங்களின் புரமோஷன் எந்திரனாக செயல்பட்டு வருகிறது.