10 வருடங்கள் கழித்து வெளியான 'மங்காத்தா' செயின் ரகசியம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜீத் நடித்த ’மங்காத்தா’ திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து அதனை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வந்தனர் என்பதை பார்த்தோம். அதுமட்டுமின்றி ’மங்காத்தா’ படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி உள்பட ஒருசிலர் தங்களுடைய அனுபவங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’மங்காத்தா’ படத்தில் அஜீத்துக்கு ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்த வாசுகி பாஸ்கர் 10 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் ரகசியம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ’மங்காத்தா’ படம் என்றாலே அஜித்தின் சால்ட் அன்ட் பெப்பர் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். இதனையடுத்து அஜித் அணிந்திருந்த ஒரு செயின் அனைவரையும் கவர்ந்தது என்பது தெரிந்ததே.
இந்த செயின் குறித்த ரகசியத்தை தான் வாசுகி பாஸ்கர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தின் ஹீரோவுக்கு ஒரு டாலருடன் கூடிய ஒரு செயின் இருக்கவேண்டும் என்று இயக்குனர் வெங்கட் பிரபு எண்ணினார். அதற்கு காரணம் கிளைமாக்ஸில் அந்த செயினை கழற்றி நெருப்பில் போட்டு விடுவது போன்ற ஒரு காட்சி இருப்பதால் ஆரம்பத்திலிருந்தே செயின் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்த படத்தில் அவர் ஒரு போலீஸ் அதிகாரியாக இருப்பதால் அந்த செயின் கை விலங்கு போன்று இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் அவர் பரிந்துரை செய்தார். படப்பிடிப்பிற்கு ஒரு நாளுக்கு முன்னர் தான் அந்த கைவிலங்கு செயின் தயாரானது என்று தனது சமூக வலைத்தளத்தில் வாசுகி பாஸ்கர் பதிவு செய்துள்ளார். 10 ஆண்டுகள் கழித்து ’மங்காத்தா’ செயின் குறித்த இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com