அஜீத்-விஜய்க்கு கிடைக்காத பெருமையை பெற்ற தனுஷ்

  • IndiaGlitz, [Friday,December 11 2015]


2015ஆம் ஆண்டின் இந்தியாவின் டாப் 100 திரை நட்சத்திரங்கள் குறித்த பட்டியல் ஒன்றை ஃபோர்ப்ஸ் இந்தியா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.. கடந்த வருடம் வெளியான இந்த பட்டியலில் அஜீத், விஜய் இடம்பெற்றிருந்த நிலையில் இவ்வருட பட்டியலில் இருவரின் பெயர்களும் மிஸ் ஆகியுள்ளது அனைவரையும் ஆச்சரியம் அடைய வைத்துள்ளது.


இந்த பட்டியலில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் முதலிடத்தில் உள்ளார். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் 14 வது இடத்தில் உள்ளார். தமிழ் நடிகர்களில் 'தங்க மகன்' தனுஷ் 37வது இடத்தை பெற்று முதலிடத்தில் உள்ளனர்.

கோலிவுட்டின் இரண்டு பெரிய நடிகர்களான ரஜினியும் கமலும் 46 மற்றும் 69வது இடத்தில் உள்ளனர். மேலும் நகைச்சுவை நடிகர் சந்தானம் 52வது இடத்திலும், சூர்யா 71வது இடத்திலும் பாகுபலி' இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி 72வது இடத்திலும் ஆர்யா 80வது இடத்திலும் உள்ளனர்.

நடிகைகளில் காஜல் அகர்வால் 58வது இடத்திலும், ஸ்ருதிஹாசன் 61வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய் நாயகியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகைகளில் ஒருவரான நந்திதா ஸ்வேதா...

ஐந்து இளம் ஹீரோக்களுடன் நடிக்கும் அனுஷ்கா?

'பாகுபலி', 'ருத்ரம்மாதேவி', மற்றும் இஞ்சி இடுப்பழகி' படங்களை அடுத்து அனுஷ்கா தற்போது 'பாகுபலி 2' படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்...

வெள்ள நிவாரண நிதி: கார்த்தியிடம் கமல்ஹாசன் கொடுத்த ரூ.15 லட்சம்

சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு...

'தனி ஒருவன்' இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்?

சமீபத்தில் 'தனி ஒருவன்' என்ற மெகா ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் ஜெயம் ராஜா விஜய்யின் 60வது படத்தை இயக்கும் இயக்குனர்களின் பட்டியலில் இருந்தார்...

தனுஷின் தங்கமகன்' இன்று சென்சார்?

அனேகன்' மாரி' படங்களை தொடர்ந்து இவ்வருடத்தின் மூன்றாவது தனுஷ் படமான 'தங்கமகன்' திரைப்படம் இம்மாதம் ரிலீஸ் ஆகும்...