கொரோனா தடுப்பு நிதி: அஜித் ரூ.1.25 கோடி நிதியுதவி

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கடந்த இரண்டு வாரங்களாக எந்தவித சினிமா படப்பிடிப்பும் நடைபெறவில்லை. இதனை அடுத்து சினிமா தொழிலாளர்கள் வறுமையில் வாடுவதாகவும் அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் நடிகர் நடிகைகள் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் நிதி உதவி செய்ய வேண்டும் என்றும் பெப்சி அமைப்பின் தலைவர் ஆர் கே செல்வமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் 50 லட்சமும், உலக நாயகன் கமலஹாசன், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் தலா ரூபாய் 10 லட்சம் மற்றும் பலர் நூற்றுக்கணக்கான மூட்டைகள் அரிசியாகவும் பெப்சி அமைப்பின் தொழிலாளர்களுக்கு உதவி செய்தனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவராகிய நடிகர் அஜித் ரூபாய் 25 லட்சம் பெப்சி அமைப்பிற்கு நிதி உதவி செய்துள்ளார். அதுமட்டுமின்றி பிரதமர் நிவாரண நிதியாக ரூ.50 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதியாக ரூ.50 லட்சமும் அவர் நிதியுதவி செய்துள்ளார் என்றும், மொத்தம் ரூ.1.25 கோடி இன்று ஒரே நாளில் நிதியுதவி செய்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

More News

ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீடிக்க திட்டமா? பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு 21 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஊரடங்கு உத்தரவு முடிய ஏழு நாட்களே உள்ளது

முதல் முறையாக நேற்று சீனாவில் கொரோனாவால் எந்த உயிரிழப்பும் நிகழவில்லை!!!

கொரோனா நோய்த்தொற்று கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி உலக சுகாதார மையத்தால் உறுதிசெய்யப்பட்டது.

11 மாநிலங்களில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா எண்ணிக்கை விகிதங்கள்!!!

இந்தியாவில் மார்ச் 1 அன்று வெறுமனே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக இருந்தது. ஒரு மாதத்தில் தற்போது 4 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது.

மும்பை மாப்பிள்ளைக்கும் டெல்லி பெண்ணிற்கும் வீடியோ காணொலி மூலம் நடைபெற்ற திருமணம்!!!

மும்பையைச் சேர்ந்த கடற்படை அதிகாரியான ப்ரீத் சிங் என்பவருக்கும் டெல்லியைச் சேர்ந்த நீத் கவுர் என்பவருக்கும் ஏப்ரல் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது

கொரோனா எதிரொலியால் கடும் வீழ்ச்சியை சந்தித்த முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு!!!

கொரோனா வைரஸ் பாதிப்பினால் உலகப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது