அஜித்' என்ற ஒற்றைச்சொல் மந்திரம்

  • IndiaGlitz, [Sunday,May 01 2016]

தல' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அஜித்தை நடிகர் என்ற கோணத்தில் பார்ப்பதை விட நல்ல மனிதர் என்ற கோணத்தில் பார்ப்பவர்களின் எண்ணிக்கைதான் மிக அதிகம். சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை நெருங்கியிருக்கும் ஒருவர், எந்தவித பந்தாவும் இல்லாமல் பெரும்பாலான சர்ச்சைகளுக்கு தனது மெளனத்தை மட்டுமே பதிலாக அளிப்பவர்தான் அஜித்.
சின்ன பட்ஜெட் படங்களுக்கு கூட பட்ஜெட்டையும் மீறி விளம்பரம் செய்ய வேண்டிய சூழ்நிலை தமிழ் சினிமாவில் இருக்கின்றது. ஒவ்வொரு படத்திற்கும் டீசர், டிரைலர், இசை வெளியீடு, புரமோஷன், விளம்பரம் என கோடிக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிலையில், அஜித்தின் படங்களுக்கு பெரிய புரமோஷனோ விளம்பரமோ தேவையில்லை. கடந்த சில வருடங்களாக அஜித்தின் படங்களுக்கு பாடல் வெளியீட்டு விழாவே நடைபெறவில்லை. ஆனால் மிகப்பிரமாண்டமாக விழா நடத்தி பாடல் வெளியீட்டு விழா நடத்தியது போன்ற ஒரு பிரம்மையை அஜித் ரசிகர்கள் இணையதளங்களில் ஏற்படுத்திவிடுவார்கள்.
இன்றளவும் அஜித் ரசிகர்களின் கட்டுப்பாட்டில்தான் ஃபேஸ்புக்கும் டுவிட்டரும் உள்ளது. அஜித் தும்மினால்கூட போதும், அதுவும் செய்தியாகி, இந்திய அளவில் டிரண்ட் ஆகிவிடும். அஜித் பிறந்தநாள் மட்டுமின்றி அவருடைய மகள் பிறந்த நாள், மகன் பிறந்த நாள், மனைவி ஷாலினி பிறந்த நாள் என்று எது வந்தாலும் இணையதளத்தில் அஜித் ரசிகர்கள் டிரண்ட் ஆக்கிவிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தப்பித்தவறி அஜித் குறித்து யாராவது தவறாக பேசிவிட்டால், அந்த நபர் அஜித்தை அவ்வாறு பேசவில்லை என்று மறுப்பு தெரிவிக்கும்வரை அஜித் ரசிகர்களின் கண்டனங்களில் இருந்து தப்பமுடியாது. அதே நேரத்தில் சின்ன வேடங்களில் நடிக்கும் நடிகரோ அல்லது நடிகையோ அஜித்தை பற்றி புகழ்ந்து ஒரே ஒரு ஸ்டேட்டஸ் போட்டால் போதும் அவர் இந்திய அளவில் டிரெண்ட் ஆவதையும் யாராலும் தடுக்க முடியாது. பெரும்பாலான புதுமுக நடிகர் அல்லது நடிகைகள் தங்கள் படங்களின் ரிலீஸின்போது தான் ஒரு அஜித்தின் வெறித்தனமான ரசிகர் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டால் போது, அந்த நடிகரின் படம் நல்ல புரமோஷனை பெற்றுவிடும்.
அஜித்தின் கால்ஷீட் கிடைத்துவிட்டால் போதும், ஒரு தயாரிப்பாளர் கோடீஸ்வரர் ஆகிவிட்டார் என்றே எழுதி வைத்துக்கொள்ளலாம். அந்த அளவுக்கு அஜித்தின் படங்கள் வசூல் மழை பெய்யும். குறிப்பாக அஜித் படங்களின் ஓப்பனிங் வசூல், சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஓப்பனிங் வசூலுக்கு சமமானது என்று கூட சொல்வதுண்டு.
அஜித்தின் வெற்றிக்கு காரணம் அவர் தொழிலில் காட்டும் முழு ஈடுபாடுதான். எவ்வளவு பெரிய இயக்குனராக இருந்தாலும், அறிமுக இயக்குனராக இருந்தாலும் இயக்குனர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்வார். தான் ஒரு மாஸ் நடிகர் என்பதற்காக பில்டப் காட்சிகளோ, தன்னை புகழும்படியான காட்சிகளோ வைக்கும்படி வற்புறுத்த மாட்டார். தன்னால் எந்த விதத்திலும் படப்பிடிப்பு நிற்கக்கூடாது என்பதிலும் உறுதியாக இருப்பவர் அஜித். சமீபத்தில் 'வேதாளம்' படத்தின் இறுதிக்காட்சியை படமாக்கும்போது எதிர்பாராதவிதமாக அஜித்துக்கு காயம் ஏற்பட்டது. மற்ற நடிகராக இருந்தால் உடனே படப்பிடிப்பு கேன்சல் செய்யப்பட்டிருக்கும். ஆனால் அஜித், வலியை பொறுத்துக்கொண்டு தன்னுடைய காட்சிகள் சமந்தப்பட்ட காட்சிகளை முடித்துவிட்டுத்தான் சிகிச்சைக்கு சென்றார்.

ஒரு நடிகர் என்பவர் திரையில் தோன்றுபவராக மட்டுமே இருக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர் அஜித். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை பெரும்பாலும் தவிர்த்துவிடுவார். முன்னாள் முதல்வர் தலைமையில் நடந்த ஒரு பாராட்டு விழாவில் ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு பின்னர்தான் இந்த கொள்கையை அஜித் தீவிரமாக கடைபிடித்து வருகிவதாக கூறுவதுண்டு. பத்திரிகையாளர் சந்திப்பு, பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றை தொடர்ந்து தவிர்த்து வரும் அஜித்தின் இந்த பழக்கத்தையும் ஒரு பலமாகவே பார்த்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.
ஆனாலும் சமீபத்தில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு அவர் வாக்களிக்க கூட வராததை அவரது ரசிகர்களே ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் அவர் கலந்து கொண்டிருக்கலாம் என்பதும் பலரது கருத்தாக இருந்து வருகிறது.
அஜித்தின் தீவிர ரசிகர்களை தவிர நடுநிலை விமர்சகர்கள் அவர் மீது வைக்கும் ஒரு குற்றச்சாட்டையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டியதுள்ளது. அஜித் ஆரம்பத்தில் ஒருசில வித்தியாசமான மாறுபட்ட வேடங்களை ஏற்று நடித்தபோதிலும், கடந்த சில வருடங்களாக அவர் புதிய முயற்சிகள் எதுவும் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மாஸ் கேரக்டர் குறிப்பாக நெகட்டிவ் கேரக்டர் அஜித்துக்கு சூப்பராக செட் ஆகிவிட்டதால் தொடர்ந்து அதே வேடத்திலேயே நடித்து வருகிறார். அவ்வப்போது ரசிகர்களுக்கு அவர் தனது மாறுபட்ட நடிப்பையும் வெளிப்படுத்தலாம் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது. இனிவரும் படங்களில் அஜித், அவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுவார் என நம்புவோம்.
அஜித்துக்கு இந்த அளவுக்கு புகழ் வர இன்னொரு காரணமும் உண்டு. நூறு ரூபாய் டியூப் லைட்டை அன்பளிப்பாக வழங்கிவிட்டு தன்னுடைய பெயரை பெரிய அளவில் விளம்பரப்படுத்தும் மக்கள் வாழும் நாட்டில் நாம் இருக்கின்றோம். ஆனால் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் சத்தம் இல்லாமல் உதவி செய்துவிட்டு அதை ஒரு பொருட்டாகவே எண்ணாமல் அவர் காட்டும் அமைதி உண்மையில் பெரிய மனிதர்களுக்கு கூட வருவது கடினம். கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்து அழகு பார்ப்பதில் அஜித்தை முதன்மையானவர் என்று கூறினால் அது மிகையாகாது.
அஜித்தின் மற்றொரு நல்ல குணம், தனக்கு கீழே பணிபுரிபவர்களாக இருந்தாலும் சரிக்கு சமமாக மதிக்கும் அவரது பழக்கம். அஜித்தின் நடிப்பை விமர்சிப்பவர்கள் கூட அவரது குணநலன்களை குறை சொல்வதே கிடையாது.,
மேலும் ரஜினிக்கு பின்னர் தனது உண்மையான தோற்றத்தை வெளியே காண்பிப்பதில் கொஞ்சம் கூட தயக்கம் காட்டாதவர். நரைத்த முடியையும், சால்ட் அண்ட் பெப்பர் என்ற புது டிரெண்ட்டை உண்டாக்கியவர். இன்னும் அஜித்தை பற்றியும் அவரது நல்ல பழக்கவழக்கங்கள் குறித்தும் சொல்லிக்கொண்டே போகலாம்.
அஜித் என்ற ஒற்றைச்சொல் மந்திரத்திற்கு மயங்காதவர்கள் தமிழகத்தில் இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்த அந்த நல்ல உள்ளத்திற்கு நமது இதயங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறோம்.

More News

பூனம் பாஜ்வாவுக்கு திருமணம் நடந்தது உண்மையா? அவரே விளக்குகிறார்

சுந்தர் சி இயக்கிய 'அரண்மனை 2' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை பூனம் பாஜ்வாவுக்கும் பிரபல தெலுங்கு இயக்குனர் சுனில்ரெட்டிக்கும் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் ரகசிய திருமணம் நடந்ததாக இணையதளங்களில் செய்திகள் வெளியாகியது....

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'கபாலி'- டீசர் விமர்சனம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் டீசர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சற்று முன்னர் இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் ஸ்டார் தனக்கே உரித்தான் ஸ்டைலில் நடந்து வரும் காட்சியுடன் டீசர் தொடங்குகிறது....

'கபாலி' டீசரை எதிர்நோக்கும் கோலிவுட் நட்சத்திரங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் டீசர் நாளை காலை 11 மணிக்கு யூடியூப் இணையதளத்தில் வெளியாகும்...

விஷாலின் மனித நேயத்திற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு

நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளாக நாசர், விஷால், கார்த்தி உள்பட புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றதில் இருந்தே நலிந்த நாடக மற்றும் திரைப்பட...

ராணா-யுவன்ஷங்கர் ராஜா இணையும் தமிழில் ஒரு சரித்திர படம்

எஸ்.எஸ்.ராஜமவுலியின் பாகுபலி' படத்தில் பிரபாஸூக்கு இணையாக வில்லனாக நடித்து மிரட்டிய ராணா அதன் பின்னர் 'பெங்களூர் நாட்கள்' படத்தில் நடித்தார்...