தமிழகத்தில் கொரோனாவை ஒழிக்க அஜித் கொடுத்த ஐடியா!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் கூறுவதெல்லாம் பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதுதான். அதேபோல் சுகாதாரத்துறையினர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் இருக்கும் இடங்களில் கிருமி நாசினிகள் தெளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது
இந்த நிலையில் சுகாதார பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் மூலம் அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கின்றது. இந்த நிலையில் தல அஜித் இது குறித்து ஒரு ஐடியாவை தமிழக அரசுக்கு கொடுத்துள்ளதாக டாக்டர் கார்த்திகேயன் என்பவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்
தல அஜித்தின் தலைமையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த தக்ஷா என்ற குழுவினர் அமைத்த ட்ரோன், இந்திய அளவில் நடைபெற்ற கல்லூரிகளுக்கான டிரோன் போட்டியில் முதலிடம் பெற்றது என்பதும் ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் இரண்டாமிடம் பெற்றது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தக்ஷா குழுவினர் உருவாக்கிய ட்ரோன் மூலம் தமிழகம் முழுவதும் குறிப்பாக கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமுள்ள சிகப்பு மண்டல நகரங்களில் கிருமிநாசினியை தெளிக்கலாம் என்று அஜித் ஐடியா கொடுத்ததாகவும், இந்த ட்ரோன் வெறும் அரை மணி நேரத்தில் 16 லிட்டர் கிருமி நாசினியை தெளித்துவிடும் தன்மை கொண்டது என்று அஜித் கூறியதாகவும் டாக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு, அஜித்தின் இந்த ஐடியாவை ஏற்று ஒரு சில குறிப்பிட்ட மாவட்டங்களில் தக்ஷா குழுவினர்களின் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளித்து வருவதாகவும் விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த நடைமுறை செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தல அஜித்தின் இந்த ஐடியா மூலம் கொரனோ மிக சீக்கிரம் தமிழகத்தில் ஒழியும் என்று அஜித் ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
முன்னதாக தமிழகத்தில் ஒரு கொரோனா நோயாளி கூட இல்லை என்ற நிலை வந்தால் தான் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என்று அஜித், தயாரிப்பாளர் போனிகபூரிடம் வேண்டுகோள் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments