சென்னையில் 'தல' தரிசனம். ரசிகர்கள் மகிழ்ச்சி

  • IndiaGlitz, [Saturday,July 01 2017]

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வந்த 'விவேகம்' படத்தின் ஒருசில காட்சிகளின் படப்பிடிப்பிற்காக அஜித், விவேக் ஓபராய் உள்பட படக்குழுவினர் மீண்டும் கடந்த வாரம் செர்பியா சென்றதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படப்பிடிப்பு கடந்த வியாழன் அன்று முடிவடைந்ததை அடுத்து படக்குழுவினர் தற்போது சென்னை திரும்பியுள்ளனர். இன்று காலை தல அஜித் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியபோது அங்கிருந்த அஜித் ரசிகர்கள் 'தல' தரிசனத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு தற்போது முற்றிலும் முடிவடைந்ததை அடுத்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமாக தயாரிப்பில் உருவாகியுள்ள 'விவேகம்' படத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஜிஎஸ்டி: மோடிக்கு எதிராக ரஜினியை திருப்ப எடப்பாடியின் வியூகமா?

பிரதமர் மோடியின் மத்திய அரசுக்கு எதிராக ரஜினி, விஜய் போன்றவர்களை திருப்ப, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆடும் சதுரங்க விளையாட்டு தான் ஜிஎஸ்டி என்று கிருஷ்ணவேணி பஞ்சாலை, பறந்து செல்ல வா போன்ற படங்களை இயக்கிய தனபால் பத்மநாபன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

'அம்மா வழியில் ஆட்சி நடத்துகிறேன்' என்று கூறுபவர்களை உதைப்பேன். மன்சூர் அலிகான்

நாடு முழுவதும் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள ஜிஎஸ்டி வரி பல துறைகளை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

அண்ணன் இசையில் பாடிய அனுபவம்! ஏ.ஆர். ரஹ்மான் தங்கை பெருமிதம்

ஸ்ரீதேவி நடிப்பில் உருவாகியுள்ள 'மாம்' படம் தமிழிலும் வெளியாகவுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளரும் ஆஸ்கார் நாயகனுமான ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பாடலை தனது தங்கை இஷ்ரத்காதிரி அவர்களை பாட வைத்துள்ளார்...

கத்தியை காட்டி மிரட்டியவருக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்த காவல்துறை அதிகாரி

கதிராமங்கலம் கிராமத்தில் அமைதியாக போராடிய கிராமத்து மக்களை அடித்து விரட்டிய காவல்துறையினர் ஒருபக்கம் இருக்கும் நிலையில் தன்னை கத்தியால் குத்த வந்த ஒருவரை கட்டிப்பிடித்து சமாதானப்படுத்தி அவருக்கு தேவையான மருத்துவ உதவி மற்றும் உணவும் வாங்கிக்கொடுத்த ஹாங்காங் காவல்துறை அதிகாரி ஒருவரின் நெகிழ வைக்கும் உதவி குறித்த செய

கடனை எப்படி அடைக்கிறது? 'இவன் தந்திரன்' இயக்குனர் கண்ணீர் பேட்டி

நாடு முழுவதும் இன்று அதிகாலை 12 மணி முதல் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்துள்ளது. ஜிஎஸ்டி வரியுடன் தமிழக அரசின் நகராட்சி வரியான 30% கேளிக்கை வரியையும் திரையரங்குகள் செலுத்த வேண்டிய நிலை உள்ளதால் திரையரங்க கட்டணத்தில் இருந்து 58% வரி மட்டுமே செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது...