close
Choose your channels

ஆட்டோவில் சென்ற தல அஜித்: வைரல் வீடியோ!

Friday, March 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கால் டாக்சியில் சென்னையில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகம் வந்தபோது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பழைய காவல்துறை ஆணையர் அலுவலகம் அருகே உள்ள ரைபிள் கிளப்பிற்கு செல்வதற்கு பதிலாக அவர் புதிய காவல்துறை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்ததால் வந்தார் என்பதும் அதன் பின்னர் அவர் சரியான இடத்திற்கு சென்றார் என்பதும் தெரிந்ததே

அதேபோல் சமீபத்தில் தல அஜித் சைக்கிளில் ரைட் செய்த புகைப்படங்கள் வைரல் ஆனது என்பதும் அவருடைய நண்பர் ஒருவர் தெரிவித்த தகவலின்படி சுமார் 30 ஆயிரம் கிலோ மீட்டர் சைக்கிளில் சென்றதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் கால் டாக்ஸி, சைக்கிளை அடுத்து தல அஜித் ஆட்டோவில் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.. தல அஜித் ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும்போது ஆட்டோவின் அருகில் சென்ற நபர் ஒருவர் இந்த வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து அஜித் ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாகி வருகின்றனர்

இந்த நிலையில் தல அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் விரைவில் நடைபெற இருப்பதாகவும் இந்த படத்தை வரும் மே மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment