புதிய லுக்குடன் அஜித் சென்றது எங்கே தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,October 05 2019]

நேற்று சென்னை விமான நிலையத்தில் தல அஜித்தை புதிய இளமையான தோற்றத்தில் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து அவருடன் செல்பி எடுக்க முண்டியெடுத்தனர். அஜித்தும் பொறுமையாக அனைவருடனும் செல்பி எடுத்து கொண்டார். ஒருசிலரிடம் இருந்து மொபைல் போனை வாங்கி அவரே செல்பி எடுத்து கொடுத்தார்.

இந்த நிலையில் ‘தல 60’படத்திற்கான புதிய லுக்தான் இந்த கெட்டப் என்றும், தல 60’ படத்தின் படப்பிடிப்பிற்குத்தான் அஜித் செல்வதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் அஜித் சென்றது டெல்லிக்கு

டெல்லியில் உள்ள டாக்டர் கர்னிசிங் துப்பாக்கி சுடும் மையத்திற்கு அஜித் சென்றுள்ளார். அங்கு அவர் துப்பாக்கி சுடும் பயிற்சியாளர்களுடன் ஆலோசனை செய்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் கோவையில் நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல், 50 மீட்டர் ப்ரீ பிஸ்டல் மற்றும் 25 மீட்டர் பிஸ்டல் ஆகிய பிரிவுகளில் பங்கேற்ற அஜித் அடுத்த சுற்றுக்கு தகுதியானதை அடுத்து, வரும் டிசம்பர் மாதம் மத்தியபிரதேச மாநிலம் போபால் நகரில் நடைபெறும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அவர் பங்கு பெற உள்ளார். இந்த போட்டியில் பங்கேற்பது குறித்த ஆலோசனைக்காகவும் பயிற்சிக்காகவும் அவர் டெல்லி சென்றிருப்பதாக கூறப்படுகிறது

More News

மணிரத்னம் மீது தேசத்துரோக வழக்கு: பொங்கி எழும் திரையுலகினர்

மணிரத்னம் உள்பட 50 பிரபலங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதி கையெழுத்திட்ட விவகாரத்தில் அவர்கள் அனைவர் மீதும் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார்? பரபரப்பு தகவல்!

பிக்பாஸ் 3 சீசன் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் பிக்பாஸ் சீசன் 3, டைட்டில் வின்னர் யார் என்பது நாளை இரவு தெரிந்துவிடும். வெற்றியாளரை தேர்வு செய்ய வாக்குகள் பதிவு செய்யப்படுவது நேற்றுடன்

'தளபதி 64': நண்பர்களுக்கு கைகொடுத்த தளபதி விஜய்!

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படமான 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த படத்தில் அவருடைய தீவிர ரசிகரும்,

'தல' நியூலுக்: வைரலாகும் அஜித்தின் இளமை தோற்றம்

தல அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் சூப்பர்ஹிட் ஆகியுள்ள நிலையில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிக்கவுள்ள 'தல 60' திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளது

8 வருடத்திற்கு முன் 4 நாட்கள் மட்டுமே நடித்த படம்: யோகிபாபு

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக யோகிபாபு பெரும்பாலான படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்தாலும், ஒரு சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.