சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் அஜித்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த தீபாவளி தினத்தில் ரிலீஸான 'வேதாளம்' படத்தை அடுத்து தல அஜித் தனக்கு நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்து கொண்டிருந்த முழங்கால் மற்றும் தோள்பட்டை வலியில் இருந்து விடுபட அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்பதை ஏற்கனவே பலமுறை பார்த்துள்ளோம். இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு பின்னர் சின்ன சின்ன உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாட்டால் எதிர்பார்த்ததைவிட சீக்கிரமாக அஜித் குணமாகிவிட்டார் என்று கூறப்படுகிறது.
மேலும் அஜித் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் லண்டனுக்கு ஓய்வு எடுக்க செல்லவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளிவந்தது. இந்த தகவலை உறுதிப்படுத்துவதுபோல் நேற்று சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அஜித் குடும்பத்தினர் நேரில் வந்தனர்.
அஜித் குடும்பத்தினர் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வருவது குறித்த செய்தியை கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் பாஸ்போர்ட் அலுவலகம் முன் குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. சிரித்த முகத்துடன் அஜித் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நடந்து செல்வது போன்ற புகைப்படங்கள் இணையதளத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.
அஜித்துக்கு லண்டன் செல்ல விசா கிடைத்துவிட்டதாகவும் இன்னும் ஒருசில நாட்களில் அவர் தனது குடும்பத்தினர்களுடன் லண்டன் செல்வார் என்றும் ஓய்வை முடித்து அவர் சென்னை திரும்பியவுடன் அஜித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com