'வலிமை'யைவிட இரண்டு மடங்கு மாஸ்: 'தல 61' படம் குறித்து போனிகபூர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித்தின் ’வலிமை’ திரைப்படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு காட்சியாக படக்குழுவினர் செதுக்கி உள்ளனர் என்பதும் இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு மாஸ் படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தல அஜித்தின் அடுத்த படத்தையும் எச் வினோத் இயக்க இருப்பதாகவும் போனிகபூர் தயாரிக்க இருப்பதாகவும் ’வலிமை’ படக்குழு மீண்டும் இணைய இருப்பதாகவும் கூறப்பட்டது. அந்த தகவலை தற்போது தயாரிப்பாளர் போனி கபூரை அவர்கள் உறுதி செய்துள்ளார்.
’வலிமை’ படத்தை அடுத்து தல 61 படத்தையும் நாங்கள்தான் தயாரிக்க உள்ளோம் என்றும், ‘தல 61’ திரைப்படம் வலிமையை விட இரண்டு மடங்கு மாஸ் ஆக இருக்கும் என்றும், இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டது என்றும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறினார். மேலும் ’தல 61’ படமும் ஒரு முக்கியமான பண்டிகை நாளில் தான் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் போனிகபூர் அந்த பேட்டியில் தல அஜித்தின் ரசிகர்கள் அவர் மேல் வைத்திருக்கும் பாசத்தை போல் வேறு எந்த நடிகருக்கும் இருப்பதை நான் பார்த்ததில்லை என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித் ரசிகர்கள் ’வலிமை’ அப்டேட் கேட்டு உலக அளவில் இந்த படத்தை பாப்புலராகி விட்டதை தான் ஆச்சரியத்துடன் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments