'தல 60' படம் குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Saturday,September 28 2019]

தல அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் நேற்று எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜீத் நடிக்க உள்ளார் என்பது தெரிந்ததே

‘தல 60’ என்று அழைக்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்குவதாக திட்டமிட்டிருந்த நிலையில், ஆரம்பகட்ட பணிகளில் தாமதம் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.

இந்த நிலையில் தற்போது ‘தல 60’ படக்குழுவினர் விறுவிறுப்பாக ஆரம்ப கட்ட பணியை செய்து வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்கும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மங்காத்தா, ஆரம்பம், என்னை அறிந்தால் ஆகிய படங்களை அடுத்து மீண்டும் போலீஸ் கேரக்டரில் அஜீத் இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இது ஒரு மசாலா ஆக்ஷன் படம் என்றும் இந்த படம் அஜித்தின் மிகப்பெரிய வெற்றிப் பட்டியலில் இணையும் என்றும் கூறப்படுகிறது