தல 60' திரைப்படம் எப்படி இருக்கும்? போனிகபூர் பேட்டி!

  • IndiaGlitz, [Monday,August 12 2019]

தல அஜித் நடித்த 59-வது படமான 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் 'விஸ்வாசம்' படத்தை விட வசூலில் சாதனை செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தினமும் குடும்ப ஆடியன்ஸ்கள் இந்த படத்தை பார்க்க கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு வருவதால் இந்த படத்தின் வசூல் புதிய சாதனையை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது

இந்த நிலையில் தல அஜித் மற்றும் எச்.வினோத் ஆகியோர் கூட்டணியில் மீண்டும் ஒரு படத்தை தயாரிக்க உள்ள போனிகபூர், இந்த படம் குறித்த சில கருத்துக்களை தெரிவித்து உள்ளார், 'தல 60' என்ற டைட்டிலில் இப்போதைக்கு தொடங்க உள்ள இந்த படம் ஒரு முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படம் என்றும், பைக் கார் என நிறைய சாகச காட்சிகள் இந்த படத்தில் இருக்கும் என்றும், குறிப்பாக பைக் சேசிங் காட்சிகள் அதிகம் இருக்கும் என்றும் போனிகபூர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது தெரிவித்தார்

ஏற்கனவே இந்த படம் குறித்த சில தகவல்கள் வெளிவந்த நிலையில் அந்த தகவல்களை போனி கபூர் தற்போது உறுதி செய்துள்ளார். மேலும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் ஒரு பொழுதுபோக்கு படமாக 'தல 60' படம் இருக்கும் என்றும் இந்த படத்தை தமிழில் மட்டுமே தயாரிக்க திட்டமிட்டு உள்ளதாகவும், தேவைப்பட்டால் ஹிந்தியிலும் இந்த படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் போனி கபூர் தெரிவித்துள்ளார்

'தல 60' படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளதாகவும் அடுத்த ஆண்டு இந்த படம் பிரம்மாண்டமாக வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 'தல 60' படமும் வெற்றி பெற்றால் அஜித்துக்கு ஹாட்ரிக் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது