அஜித்தின் 59வது படம் குறித்த அசத்தலான தகவல்

  • IndiaGlitz, [Tuesday,October 30 2018]

தல அஜித் நடித்து வரும் 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ள நிலையில் அஜித்தின் அடுத்த படமான 'தல 59 திரைப்படம் நேற்று கையெழுத்தாகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தை 'சதுரங்க வேட்டை' மற்றும் 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கவுள்ளதாகவும் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன்னர் கடந்த 2006ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த 'வரலாறு' படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார் என்பதும் 12 வருடங்களுக்கு பின் அவர் மீண்டும் அஜித்துடன் இணைகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2019ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி அடுத்த ஆண்டு தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

More News

'சர்கார்' படத்தில் இடம்பெற்றுள்ள 'மாஸ்' பஞ்ச் டயலாக் இதுதான்

கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் படத்தில் மாஸ் மற்றும் பஞ்ச் டயலாக்குகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன.

செல்பி எடுத்த இளைஞரின் செல்போனை தட்டிவிட்டது ஏன்? சிவகுமார் விளக்கம்

நடிகர் சிவகுமார் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்தபோது ஒரு இளைஞர் ஆர்வக்கோளாறில் சிவகுமாருடன் செல்பி எடுக்க முயன்றார். ஆனால் செல்பி எடுக்க வந்த இளைஞரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்டார்.

மூன்று மணி நேரத்தை நெருங்கிய 'சர்கார்' ரன்னிங் டைம்

விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் குறித்தும் அதன் கதை குறித்தும் சர்ச்சைக்குரிய செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும் இந்த படம் தீபாவளி விருந்தாக வெளிவரவுள்ளதை படக்குழுவினர் உறுதி செய்து வருகின்றனர்.

போலீசார் முன் உடைகளை களைந்த மாடல் அழகி

மும்பையில் உள்ள அபார்ட்மெண்டில் போலீசார் முன் மாடல் அழகி ஒருவர் உடையை கழட்டி கலாட்டா செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் படத்துக்கு மட்டும் தான் எல்லாம் பண்ணுவீங்களா: எச்.ராஜாவை கலாய்த்த ஆடம்ஸ்

விஜய் போன்ற பெரிய நடிகரின் படத்தின் மீது மட்டும் வழக்கு போடுபவர்கள் சின்ன படத்தின் மீதும் வழக்கு போட்டால் அந்த படத்திற்கும் இலவச விளம்பரம் கிடைக்கும் என நடிகர் ஆடம்ஸ் கலாய்த்துள்ளார்