close
Choose your channels

'தல 57' படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு எங்கே?

Thursday, July 7, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று சென்னையில் 'தல 57' படத்தின் பூஜை நடைபெற்றது என்பதும், இந்த பூஜையில் இயக்குனர் சிறுத்தை சிவா, இசையமைப்பாளர் அனிருத், ஸ்டண்ட் இயக்குனர் 'ஸ்டண்ட் செல்வா' உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு எங்கே நடைபெறவுள்ளது என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
'தல 57' படத்தின் படப்பிடிப்பிற்காக ஏற்கனவே இயக்குனர் சிவா, பல்கேரியா நாட்டிற்கு சென்று லொகேஷன் பார்த்துவிட்டு திரும்பியதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெறவுள்ளதாகவும் அதுமட்டுமின்றி இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஐரோப்பிய நாடுகள் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தில் அஜித் FBI அதிகாரியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் அனுஷ்கா நாயகியாக நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகவிட்டதாகவும் இதுகுறித்த முறையான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இம்மாதம் இறுதியில் நடைபெறவுள்ள முதல்நாள் படப்பிடிப்பிற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்திற்கான பாடல்களை கம்போஸ் செய்யும் பணியை அனிருத் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment