'தல 57' படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு எங்கே?

  • IndiaGlitz, [Thursday,July 07 2016]

நேற்று சென்னையில் 'தல 57' படத்தின் பூஜை நடைபெற்றது என்பதும், இந்த பூஜையில் இயக்குனர் சிறுத்தை சிவா, இசையமைப்பாளர் அனிருத், ஸ்டண்ட் இயக்குனர் 'ஸ்டண்ட் செல்வா' உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு எங்கே நடைபெறவுள்ளது என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
'தல 57' படத்தின் படப்பிடிப்பிற்காக ஏற்கனவே இயக்குனர் சிவா, பல்கேரியா நாட்டிற்கு சென்று லொகேஷன் பார்த்துவிட்டு திரும்பியதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெறவுள்ளதாகவும் அதுமட்டுமின்றி இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஐரோப்பிய நாடுகள் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தில் அஜித் FBI அதிகாரியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் அனுஷ்கா நாயகியாக நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகவிட்டதாகவும் இதுகுறித்த முறையான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இம்மாதம் இறுதியில் நடைபெறவுள்ள முதல்நாள் படப்பிடிப்பிற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்திற்கான பாடல்களை கம்போஸ் செய்யும் பணியை அனிருத் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

More News

பாரீஸ் 'ரெக்ஸ் சினிமாவில்' 'கபாலி' செய்த சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் ஐரோப்பாவின் மிகப்பெரிய திரையரங்கான Rex Cinema திரையரங்கின் பெரிய ஸ்க்ரீனில் திரையிடப்படுகிறது...

'கபாலி' ரிலீசுக்கு முன்னர் ரஜினி சென்னை திரும்புவாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த படம் நாளை சென்சார் செய்யப்படும் என்றும் வரும் 22ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது...

இன்று முதல் மீண்டும் ஒன்றுசேரும் ஜோடி

இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய ஜெய் மற்றும் பிரபல அஞ்சலி நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான 'எங்கேயும் எப்போதும்'...

நாசர் குடும்பத்திற்கு இந்த ஆண்டு ஸ்பெஷல் ரம்ஜான். எப்படி?

பிரபல நடிகர் நாசர் தனது குடும்பத்துடன் நாளை ரம்ஜான் திருநாளை கொண்டாடவுள்ளார். அவருக்கு இப்பொழுது முதலே திரையுலகினர் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்...