ஆஸ்திரியாவின் தலைப்பு செய்தியில் 'அஜித் 57'

  • IndiaGlitz, [Friday,August 19 2016]

அஜித் நடித்து வரும் 'தல 57' படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் ஆஸ்திரியா நாட்டின் ஊடகம் ஒன்று இந்த படத்தின் செய்திகளை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள கோலிவுட் திரையுலகத்தின் படம் ஒன்று இங்கு படப்பிடிப்பு நடந்து வருவதாகவும், இந்த படத்திற்காக இந்தியாவில் இருந்து சுமார் 100 பேர்களுக்கும் மேல் வந்துள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ள அந்த ஊடகம், அங்குள்ள புகழ்பெற்ற 'தி மவுண்டன்' என்ற ஓட்டலில் படக்குழுவினர்களுக்காக 35 அறைகள் புக் செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த செய்தி கூறுகிறது.
மேலும் ஹெலிகாப்டர் உதவியுடன் பிரமாண்டமாக படப்பிடிப்பு நடந்து வருவதாகவும், ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இந்த படத்தின் படப்பிடிப்பு இருப்பதாகவும் அந்த ஊடகம் கருத்து தெரிவித்துள்ளது. ஆஸ்திரியாவில் வேண்டுமானால் அஜித்தை யாருக்கும் தெரியாமல் இருக்கலாம் ஆனால், இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித் என்றும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரிய நாட்டின் பத்திரிகையில் வெளிவந்துள்ள இந்த செய்தியை அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் பதிவு செய்து அதையும் டிரெண்ட் ஆக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'கொடி' ரிலீஸ் தேதி. தனுஷின் அதிகாரபூர்வ அறிவிப்பு

தனுஷ் தற்போது 'தொடரி' மற்றும் 'கொடி' ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று...

தனுஷின் 'கொடி' ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பு

தனுஷ் நடித்து முடித்துள்ள 'கொடி' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும்...

ரஜினியை மீண்டும் வம்புக்கு இழுத்த பிரபல இயக்குனர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அவ்வபோது சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து வரும் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா ஏற்கனவே...

ஜீவாவின் புதிய பட டைட்டில் மற்றும் முழுவிபரங்கள்

சிம்புவின் மூன்று வித்தியாசமான கேரக்டரில் உருவாகி வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது...

மணிரத்னம் உதவியாளரின் அடுத்த படத்தில் கவுதம் கார்த்திக்

பிரபல இயக்குனர் மணிரத்னம் உதவியாளரும் ஜெயம்கொண்டான்', கண்டேன் காதலை', போன்ற படங்களை இயக்கியவருமான இயக்குனர் ஆர்.கண்ணன்...