ரசிகர்களுக்கு 'தல' வழங்கும் வியாழக்கிழமை விருந்துகள்

  • IndiaGlitz, [Sunday,September 13 2015]

அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவை வரும் 17ஆம் தேதி வியாழக்கிழமை வெளியாகும் என கூறப்படும் நிலையில் அஜீத் ரசிகர்களுக்கு மற்றொரு சந்தோஷமான செய்தி வெளிவந்துள்ளது.

வரும் வியாழக்கிழமை விநாயகர் சதூர்த்தி தினத்தில் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாவது மட்டுமின்றி இனிவரும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் 'தல 56' படத்தின் 'டீசர், சிங்கிள் டிராக், டிரைலர், ஆடியோ ரிலீஸ் ஆகியவை ரிலீஸாகும் என தயாரிப்பாளர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அவர்களின் 'என்னை அறிந்தால், 'தல 56' படங்கள் உள்பட ஒவ்வொரு படமும் வியாழக்கிழமைதான் பூஜை போடப்படும் என்பதால், இந்த வியாழக்கிழமை செண்டிமெண்ட், இந்த படத்திலும் தொடர்கிறது.

ஏற்கனவே 'தல 56' சம்பந்தமாக ஏதாவது செய்திகள் வந்தாலே டுவிட்டர் இணையதளத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு டிரெண்டுக்கு கொண்டு செல்லும் அஜீத் ரசிகர்கள், இனிவரும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் டுவிட்டரில் புகுந்து விளையாட தயாராகிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், கபீர்சிங், ராகுல்தேவ், அஸ்வின், சூரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படம் தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆகிறது.

More News

அஜீத் கெட்டப்பில் அமீர்கான் நடிக்கும் 'டங்கல்'?

கடந்த வருட இறுதியில் 'பிகே' என்னும் இந்தியாவின் மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுத்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் ...

தல 56': கொல்கத்தா படப்பிடிப்பு முடிந்தது. விரைவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு

'வீரம்' சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு மால் மற்றும் தனியார்...

சந்தானம் நடித்த 'வாலிப ராஜா' ரிலீஸ் தேதி

கோலிவுட்டின் நம்பர் ஒன் காமெடி நடிகராக இருந்த சந்தானம், ஹீரோவாக மாறி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் 'இனிமே இப்படித்தான்'...

நீதிமன்றங்கள் கெட்டு போனால் நாடு உருப்படாது. ரஜினி பேச்சு

அரசியல்வாதிகள், பொதுமக்கள் கெட்டுப்போனால் கூட ஒரு நாடு உருப்பட்டுவிடும் ஆனால் நீதிமன்றங்கள் கெட்டு போனால் ...

'தூங்காவனம்' இயக்குனருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்த கமல்

கமல்ஹாசன், த்ரிஷா நடிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கிய 'தூங்காவனம்' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...