படமெடுக்கும் பாம்பு கூட கல்யாணம்… கற்பனையை மிஞ்சும் உண்மை சம்பவம்!!!

  • IndiaGlitz, [Saturday,October 31 2020]

பாம்பு என்றால் படையும் நடுங்கும் எனும் பழமொழி ஒன்று இருக்கிறது. ஆனால் தாய்லாந்து நாட்டில் உள்ள இளைஞர் ஒருவர் விஷமுடைய பாம்பை திருமணம் செய்து கொண்டு அதோடு குடித்தனம் நடத்தி வருகிறார். இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மேலும் இச்சம்பவம் தற்போது இணையத்தில் கடும் வைரலாகி இருக்கிறது.

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இறந்து போன தனது காதலிதான் மறுபிறவி எடுத்து வந்திருக்கிறாள் எனக் கூறி அதிக விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பை திருமணம் செய்து இருககிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவருடைய காதலி இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் 5 ஆண்டுகள் கழித்து அந்த இளைஞர் இந்தப் பாம்பை பார்த்திருக்கிறார். தன்னுடைய காதலிதான் மறுபிறவி எடுத்து வந்திருக்கிறாள் எனக் கூறி 10 அடி நீளம் கொண்ட அதிக விஷத்தன்மைக் கொண்ட ஒரு பாம்பை திருமணம் செய்துகொண்டு மனைவியைப் போலவே தன்னுடைய வீட்டில் வைத்திருக்கிறார்.

அந்தப் பாம்பும் இளைஞருடன் அன்பாக பழகி வருகிறது. கொடிய விஷமுடைய பாம்பாக இருந்தாலும் இதுவரையிலும் இளைஞருக்கு அந்தப் பாம்பு எந்த தீங்கும் செய்யவில்லை. ஆனால் ஒருவேளை மனைவிக்கு கோபம் வந்து லைட்டா கொட்டிட்டா என்னவாகும் என்பதுதான் தெரியவில்லை. இப்படித்தான் இச்சம்பவத்தை இணையத்தில் பார்க்கும் பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

More News

பாசம் ரொம்ப பொங்கிருச்சு, பிக்பாஸில் அரசியல் இருக்குது: கமல்ஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் தற்போது தான் ஒரு சில போட்டியாளர்களுக்கு போட்டியே புரிய ஆரம்பித்துள்ளது.

ரூ.5,000 கோடி முதலீட்டில் புதிய தொழில் நிறுவனம்… தமிழக அரசு ஒப்புதல்!!!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த புதன்கிழமை அன்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளியிட்டு இருந்தார்.

சொத்தை காரணத்திற்காக மெர்சிடிஸ்-பென்ஸ் காரை கொளுத்திய இளைஞர்… வைரலாகும் வீடியோ!!!

ரஷ்யாவில் யூடியூப் சேனலை இயக்கி வருபவர் மைக்கேல் லிட்வின். இவர் ரஷ்யாவில் பிரபலமான இளைஞராக அறியப்படுகிறார்.

வானத்தில் ஒய்யாரமாக பறக்கும் கார் … அசத்தும் புது கண்டுபிடிப்பு!!!

சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு கார் வெறுமனே 3 நிமிடத்தில் வானத்தில் பறக்கக்கூடிய ஏர் விமானமாக மாறமுடியும்.

ஐபிஎல் 2020: 50 போட்டிகள் முடிந்தும் உறுதி செய்யப்படாத பிளே ஆப் அணிகள்!

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தாமதமாக தொடங்கினாலும் ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.