20 அழகிகளுடன் தனிமைப்படுத்தி கொண்ட தாய்லாந்து அரசர்: மக்கள் கொந்தளிப்பு
- IndiaGlitz, [Sunday,March 29 2020]
கொரோனா வைரசால் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பலியாகி கொண்டும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படும் இருக்கும் நிலையிலும் தாய்லாந்து நாட்டின் அரசர், நாட்டை விட்டு வெளியேறி ஜெர்மனியில் சுமார் 20 அழகிகளுடன் அந்தப்புரத்தில் இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி, அந்நாட்டு மக்களை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தாய்லாந்து நாட்டில் மட்டும் 1200க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வரும் நிலையில் அந்நாட்டின் அரசர் மகா வஜிரலெங்கோன் என்பவர் கொரோனா பரபரப்புக்கு முன்பே தாய்லாந்து நாட்டில் இருந்து தனது அந்தப்புரத்தில் உள்ள 20 அழகிகளுடன் ஜெர்மனி சென்றுவிட்டார்.
ஜெர்மனியில் உள்ள சொகுசு பங்களாவில் அவர் அழகிகளுடன் உல்லாசமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தி தாய்லாந்து மக்களை கடும் கோபம் அடைய செய்துள்ளது. தாய்லாந்து நாட்டின் சட்டப்படி அந்நாட்டு மன்னரை விமர்சனம் செய்தால் 15 ஆண்டுகள் சிறை தண்டனை என்று சட்டம் இருக்கும் நிலையிலும் சமூக வலைதளங்களில் தாய்லாந்து அரசரை கடுமையாக அந்நாட்டு மக்கள் விமர்சனம் செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரோம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்து கொண்டிருந்தது போல் தன் நாட்டு மக்கள் துன்பத்தில் இருக்கும்போது தாய்லாந்து அரசர் 20 அழகிகளுடன் தன்னை தனிமைப்படுத்தி கொண்டது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.