உயிரை தியாகம் செய்து சிறுவர்களை மீட்க உதவிய தாய்லாந்து வீரர்

  • IndiaGlitz, [Monday,July 09 2018]

தாய்லாந்து நாட்டில் உள்ள குகை ஒன்றில் சிக்கிய 15 சிறுவர்களை மீட்க அந்நாட்டு கடற்படை, நீச்சல் வீரர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் குகையின் உச்சியில் இருந்து ஓட்டை போட்டு அதன் வழியாக சென்று இதுவரை நான்கு சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீதி சிறுவர்களையும் மீட்கும் நடவடிக்கை போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் சிறுவர்களை மீட்க தனது உயிரை கொடுத்த வீர்ர் ஒருவர் ஒரே நாளில் அந்நாட்டின் ஹீரோ ஆகியுள்ளார். தாய்லாந்து கடற்படையில் பணியாற்றி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்றவர் 38 வயது சாமன் குணன் என்பவர் குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்கும் மீட்புபணிக்குழுவில் ஒருவராக இருந்தார். மிகவும் குறுகலான குகைக்குள் இறங்கிய சாமன், தனது அனுபவத்தை வைத்து மற்றவர்களுக்கு வழிகாட்டியதோடு தானும் சிறுவர்களை தேடும் பணியில் இருந்தார்.

குகைக்குள் 20% ஆக்சிஜன் இருக்கும் என்ற கணக்கின்படி ஆக்சிஜன் சிலிண்டர் குகைக்குள் பொருத்தப்பட்டது. ஆனால் ஒருசில இடங்களில் வெறும் 6 சதவிகிதம் மட்டுமே ஆக்சிஜன் இருந்ததால் சாமன் மூச்சுத்திணறி மரணம் அடைந்தார். இவர் மரணம் அடைந்தபின்னர்தான் நிலைமையை உணர்ந்த கடற்படையினர் பின்னர் 6% ஆக்சிஜனுக்கு ஏற்ற வகையில் ஆக்சிஜன் சிலிண்டருக்கு ஏற்பாடு செய்தனர். இவ்வாறு ஆக்சிஜன் சிலிண்டர் வைத்ததால்தான் இன்னும் சிறுவர்கள் உயிருடன் உள்ளனர். தனது உயிரை கொடுத்து சிறுவர்களை காப்பாற்ற உதவிய சாமன் அவர்களை தாய்லாந்து நாடே ஹீரோ போல் கொண்டாடி வருகிறது.

More News

சர்கார் பட விவகாரம்: விஜய்க்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'சர்கார்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த மாதம் 21ஆம் தேதி வெளியாகியது

வாக்கெடுப்பெல்லாம் கிடையாது. இந்த வாரம் வெளியேறுகிறார் யாஷிகா?

பிக்பாஸ் நிகழ்ச்சியை குழந்தைகள், பெண்கள் உள்பட பலகோடி மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றார்கள் என்ற நினைப்பே இல்லாமல் பிக்பாஸ் வீட்டில் ஒருசிலர் எல்லை மீறி வருகின்றனர்.

படுக்கையில் என்ன நடந்துச்சு? பொன்னம்பலத்திடம் வாக்குவாதம் செய்யும் ஐஸ்வர்யா

நேற்றை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும்போது அனந்துவுக்கு ஒரு நபரை சிறையில் அடைக்க உரிமை கொடுக்கப்பட்டது. அவர் பொன்னம்பலத்தை சிறையில் அடைக்க விரும்புவதாக தெரிவித்தார்.

Mr.சந்திரமெளலி ஓப்பனிங் வசூல் எப்படி?

கார்த்திக், கவுதம் கார்த்திக் நடிப்பில் இயக்குனர் திரு இயக்கிய 'Mr.சந்திரமெளலி திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது எப்போது? புதிய குழப்பம்

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/apollo-employee-statement-about-jaya-s-death-is-contradictor-324203.html