உயிரை தியாகம் செய்து சிறுவர்களை மீட்க உதவிய தாய்லாந்து வீரர்
Send us your feedback to audioarticles@vaarta.com
தாய்லாந்து நாட்டில் உள்ள குகை ஒன்றில் சிக்கிய 15 சிறுவர்களை மீட்க அந்நாட்டு கடற்படை, நீச்சல் வீரர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் குகையின் உச்சியில் இருந்து ஓட்டை போட்டு அதன் வழியாக சென்று இதுவரை நான்கு சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீதி சிறுவர்களையும் மீட்கும் நடவடிக்கை போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் சிறுவர்களை மீட்க தனது உயிரை கொடுத்த வீர்ர் ஒருவர் ஒரே நாளில் அந்நாட்டின் ஹீரோ ஆகியுள்ளார். தாய்லாந்து கடற்படையில் பணியாற்றி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்றவர் 38 வயது சாமன் குணன் என்பவர் குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்கும் மீட்புபணிக்குழுவில் ஒருவராக இருந்தார். மிகவும் குறுகலான குகைக்குள் இறங்கிய சாமன், தனது அனுபவத்தை வைத்து மற்றவர்களுக்கு வழிகாட்டியதோடு தானும் சிறுவர்களை தேடும் பணியில் இருந்தார்.
குகைக்குள் 20% ஆக்சிஜன் இருக்கும் என்ற கணக்கின்படி ஆக்சிஜன் சிலிண்டர் குகைக்குள் பொருத்தப்பட்டது. ஆனால் ஒருசில இடங்களில் வெறும் 6 சதவிகிதம் மட்டுமே ஆக்சிஜன் இருந்ததால் சாமன் மூச்சுத்திணறி மரணம் அடைந்தார். இவர் மரணம் அடைந்தபின்னர்தான் நிலைமையை உணர்ந்த கடற்படையினர் பின்னர் 6% ஆக்சிஜனுக்கு ஏற்ற வகையில் ஆக்சிஜன் சிலிண்டருக்கு ஏற்பாடு செய்தனர். இவ்வாறு ஆக்சிஜன் சிலிண்டர் வைத்ததால்தான் இன்னும் சிறுவர்கள் உயிருடன் உள்ளனர். தனது உயிரை கொடுத்து சிறுவர்களை காப்பாற்ற உதவிய சாமன் அவர்களை தாய்லாந்து நாடே ஹீரோ போல் கொண்டாடி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments