கஞ்சா போதையில் ஆணுறுப்பை அறுத்துக்கொண்ட இளைஞர்… மருத்துவர்கள் அதிர்ச்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கஞ்சா போதைக்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்டு தனது ஆணுறுப்பை அறுத்துக் கொண்டுள்ளார். மேலும் இதேபோன்று போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள் பலர் தங்களுடைய ஆணுறுப்பை அறுத்துக் கொள்வதாகவும் சிதைப்பதாகவும் மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளனர்.
தாய்லாந்து நாட்டின் சியாய் மாய் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்புவரை மோசமான கஞ்சா போதைக்கு அடிமையாகி இருந்தார். பின்னர் அந்தப் பழக்கத்தில் இருந்து மீண்டுவந்த அவர் சமீபத்தில் திரும்பவும் கஞ்சா புகைக்க ஆரம்பித்து இருக்கிறார். ஆனால் இப்படிசெய்யும்போது அவருக்கு பாலியல் எண்ணம் இல்லாமலேயே ஆணுறுப்பில் விரைப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதனால் நொந்துபோன அந்த இளைஞர் திடீரென தனது ஆணுறுப்பில் இருக்கும் தோல்களை கத்திரிக்கோல் வைத்து வெட்டியெடுத்துள்ளார். இதனால் ஆணுறுப்பு மற்றும் விதைப்பையில் சேதம் ஏற்பட்டு தீவிர ரத்தப்போக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் இதுகுறித்துப் பேசிய மருத்துவர்கள் கடந்த 20 ஆண்டுகளில் போதைப்பழக்கத்தால் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களது ஆணுறுப்பை சிதைப்பது, அறுத்துக் கொள்வது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தவிர சில மோசமான மனநலப் பாதிப்புகளுக்கும் இளைஞர்கள் ஆளாகி வருகின்றனர் எனக் கவலை தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com