தனியா இருந்தா ஒண்ணும் புடுங்க முடியாது: தானா சேர்ந்த கூட்டம் டீசர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் டீசர் சற்றுமுன் வெளிவந்து இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் டிரெண்ட் ஆகி வருகிறது.
இந்த படத்தின் டீசரை பார்க்கும்போது கருப்பு பண முதலைகள் பதுக்கி வைத்திருக்கும் கள்ளப்பணத்தை வெளியே கொண்டு வரும் கதை போன்று தெரிகிறது. அவ்வாறு பதுக்கி வைத்துள்ள பணத்தை தோண்டு எடுத்தாலே இந்தியாவின் பல பிரச்சனைகளை தீர்த்துவிடலாம் என்று சூர்யா வசனம் பேசுவதில் இருந்தே இந்த படத்தின் கதை ஓரளவுக்கு தெரியவருகிறது. மேலும் சூர்யா தனது உயரதிகாரி சுரேஷ் மேனனிடம் 'தனியா ஒண்ணும் புடுங்க முடியாது, நாமெல்லாம் சேர்ந்தா நிச்சயமா எதாவது புடுங்கலாம்' என்ற நக்கலுடன் கூடிய வசனம் ரசிக்கும் வகையில் உள்ளது.
மேலும் படம் முழுவதும் வண்ண மயமாகவும், சூர்யா நகைச்சுவை கலந்த ஒரு சீரியஸ் கேரக்டரிலும், குடும்ப குத்து விளக்காக கீர்த்தி சுரேஷூம், ரம்யா கிருஷ்ணன், கார்த்திக், சுரேஷ்மேனன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதும் டீசரின் மூலம் தெரிய வருகிறது.
மொத்தத்தில் இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யும் என்றே தோன்றுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com