சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' ரன்னிங் டைம்
- IndiaGlitz, [Saturday,January 06 2018]
சூர்யா, கீர்த்திசுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' வரும் 12ஆம் தேதி பொங்கல் விருந்தாக வருவது உறுதி செய்யப்பட்டுள்ள இந்த படம் தணிக்கையில் 'யூஏ' சான்றிதழ் பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.
தானாக சேர்ந்த கூட்டம்' படம் 138.12 நிமிடங்கள் அதாவது இரண்டு மணி 18 நிமிடங்கள் மற்றும் 12 வினாடிகள் ஓடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ரன்னிங் டைம் சுமார் இரண்டேகால் மணி நேரம் என்பது சரியான அளவிலான படம் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகவுள்ள இந்த படத்தில் சூர்யா, கீர்த்திசுரேஷ், செந்தில், சரண்யா பொன்வண்ணன், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த்ராஜ், ஆர்ஜே பாலாஜி, சுரேஷ்மேனன், தம்பி ராமையா உள்பட பலர் நடித்துள்ளனர். 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இளம் இசைப்புயல் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் இந்த ஆண்டின் முதல் வெற்றிப்படமாக அமைய நமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்