'தலைவர் 170' படத்தின் 3வது நாயகி.. இன்னும் யாரெல்லாம் இருக்காங்க?

  • IndiaGlitz, [Monday,October 02 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 170’ என்ற படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் அறிவிப்புகள் ஒவ்வொரு சில மணி நேரத்திற்கு ஒரு முறை வெளியாகி கொண்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

நேற்று இந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் இன்று இந்த படத்தில் நடிக்கும் நாயகிகள் குறித்து அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

குறிப்பாக இன்று காலை துஷாரா விஜயன் இந்த படத்தில் இணைந்த உள்ளதாகவும் மதியம் ரித்திகா சிங் இணைந்து உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டதை அடுத்து சற்றுமுன் இந்த படத்தில் மஞ்சு வாரியர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த படத்தில் 3 நாயகிகள் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் இன்னும் யாரெல்லாம் நடிக்க போகிறார்கள் என்பதை அடுத்து வரும் அப்டேட்டுகளில் இருந்து தெரியவரும்.

ஞானவேல் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் திசையில் உருவாகும் ’தலைவர் 170’ திரைப்படம் ’ஜெயிலர்’ படம் போன்ற சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மற்றொரு மாபெரும் சூப்பர் ஹிட் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விஜய் ரசிகர்களை குஷிப்படுத்திய அறிவிப்பு.. 'லியோ' டிரைலர் ரிலீஸ் தேதி..!

தளபதி விஜய் நடித்துள்ள 'லியோ' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

பறந்து பறந்து சண்டை போடும் 'கங்குவா' நாயகி.. செம்ம வீடியோ வைரல்..!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி

இயக்குனர் ராஜூ முருகனின் அடுத்த பட அறிவிப்பு.. ஆனாலும் ஒரு ட்விஸ்ட்..!

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜப்பான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

ஒரு வழியாக ஆரம்பமாகிறது 'விடாமுயற்சி' படப்பிடிப்பு.. இதுதான் புதிய அப்டேட்..!

அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'விடாமுயற்சி' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என கடந்த சில மாதங்களாக எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் தற்போது கிட்டத்தட்ட

முதல் வாரமே டபுள் நாமினேஷன்.. ஜோவிகாவை குறி வைக்கும் போட்டியாளர்கள்..!

விஜய் டிவியில்  பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று தொடங்கப்பட்ட நிலையில் இன்று முதலாவது நாளில் 'லியோ' படத்தில் இடம்பெற்ற 'நா ரெடி' என்ற பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது