தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திற்கு ஆப்பு வைத்த தயாரிப்பாளர் சங்கம்
- IndiaGlitz, [Thursday,November 30 2017]
கோலிவுட் திரையுலகின் மிகப்பெரிய பிரச்சனை ஒரு திரைப்படம் வெளியான தினமே ஆன்லைனில் பைரஸி மூலம் திருட்டுத்தனமாக படம் வெளிவருவதுதான். இதனால் திரைப்பட தயாரிப்பாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் தலைமையிலான நிர்வாகிகள் பொறுப்பேற்றவுடன் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் செயல்பாடுகளை ஒடுக்க ஒரு குழு அமைத்து அதற்கான பணிகளில் ஈடுபட்டனர். முதல்கட்டமாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திற்கு வரும் விளம்பர வருமானங்களை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. விளம்பர வருமானம் இல்லாவிட்டால் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தொடர்ந்து நடத்த முடியாது என்ற ஐடியா சரியாக வொர்க் அவுட் ஆகிவிட்டது.
இந்த நிலையில் தமிழ் ராக்கர்ஸ் தனது டுவிட்டரில் தயாரிப்பாளர் சங்கம் எங்களுக்கு கிடைக்கும் விளம்பர வருமானம் அனைத்தையும் நிறுத்திவிட்டது, எனவே எங்களுக்கு நன்கொடை கொடுத்து தொடர்ந்து செயல்பட உதவுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திற்கு நன்கொடை கொடுத்து படம் பார்ப்பதற்கு பதில் அந்த காசை தியேட்டரில் கொடுத்து படம் பார்த்துவிடலாம் என்றுதான் ஒவ்வொரு ரசிகனின் எண்ணம் இருக்கும். எனவே கிட்டத்தட்ட தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் ஆப்பு வைத்துவிட்டது என்றே கூறலாம்.
ஓ....எங்களுக்கன்னா மட்டும் தக்காளி சட்னியா??? ??????
— S.R.Prabhu (@prabhu_sr) November 30, 2017
என்னா பேச்சு!?!? pic.twitter.com/aHYoL214YK