'மெர்சல்' படத்திற்கு ஆதரவாக தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்திற்கு ஏற்பட்ட சர்ச்சைகள் நாடே அறிந்ததே. நாமும் இந்த விஷயத்தை பலகோணங்களில் செய்திகளை வெளியிட்டோம். இந்த நிலையில் இந்த படத்தின் பிரச்சனை குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை என்ன என்பதை தற்போது பார்ப்போம்
சமீபத்தில் வெளிவந்துள்ள 'மெர்சல்' திரைப்படம் தொடர்பாக பல விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களிலும், தேசிய அளவிலும் சர்ச்சையாக வந்திருப்பது அனைவரும் அறிந்ததே. ஒரு திரைப்படம் கற்பனை கதையாக வரும்போதே, அக்கதை சார்ந்த Disclaimer போடப்படுகிறது. அதுமட்டுமின்றி, மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தணிக்கை குழுவால் யாருக்கும் எவ்வித பாதிப்புமில்லாத ஒரு படம் என்று சான்றிதழ் கொடுக்கிறார்கள். அந்த சான்றிதழ் முன்வைத்து மட்டுமே ஒரு திரைப்படத்தை வெளியிடுகிறோம். அச்சான்றிதழ் வாங்கும் பணிகள் எவ்வளவு கடினமானது என்பதை அதே படத்தின் மூலமாக மக்களுக்கு தெரிய வந்துள்ளது.
இவ்வளவு விஷயங்களை தாண்டி, பலகோடி ரூபாய் முதலீடு, நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரின் கடின உழைப்போடு ஒரு படத்தை தயாரித்து வெளியிடுகிறோம். அப்படத்தின் தணிக்கை முடிந்த பிறகும், காட்சியை நீக்க வேண்டும் என்பது ஜனநாயக முறைப்படி தவறான விஷயமாகும். இதனை தயாரிப்பாளர் சங்கம் ஒருபோதும் ஆதரிக்காது.
ஒரு திரைப்படத்தை பார்க்கும் பலருக்கும் பலவிதமான கருத்துக்கள் எழலாம். அக்கருத்துக்களை பகிர்வதோடு இருக்கலாமே தவிர, தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்தின் தயாரிப்பாளரை அக்காட்சிகளை நீக்க சொல்வது தவறு.
தணிக்கை சான்றிதழ் செய்யப்பட்ட படத்தை, அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் வற்புறுத்தலுக்காக மீண்டும் தணிக்கை செய்வது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்
இவ்வாறு தயாரிப்பாளர் சங்கம் 'மெர்சல்' படத்திற்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments