'மெர்சல்' படத்திற்கு ஆதரவாக தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கை

  • IndiaGlitz, [Saturday,October 21 2017]

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்திற்கு ஏற்பட்ட சர்ச்சைகள் நாடே அறிந்ததே. நாமும் இந்த விஷயத்தை பலகோணங்களில் செய்திகளை வெளியிட்டோம். இந்த நிலையில் இந்த படத்தின் பிரச்சனை குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை என்ன என்பதை தற்போது பார்ப்போம்

சமீபத்தில் வெளிவந்துள்ள 'மெர்சல்' திரைப்படம் தொடர்பாக பல விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களிலும், தேசிய அளவிலும் சர்ச்சையாக வந்திருப்பது அனைவரும் அறிந்ததே. ஒரு திரைப்படம் கற்பனை கதையாக வரும்போதே, அக்கதை சார்ந்த Disclaimer  போடப்படுகிறது. அதுமட்டுமின்றி, மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தணிக்கை குழுவால் யாருக்கும் எவ்வித பாதிப்புமில்லாத ஒரு படம் என்று சான்றிதழ் கொடுக்கிறார்கள். அந்த சான்றிதழ் முன்வைத்து மட்டுமே ஒரு திரைப்படத்தை வெளியிடுகிறோம். அச்சான்றிதழ் வாங்கும் பணிகள் எவ்வளவு கடினமானது என்பதை அதே படத்தின் மூலமாக மக்களுக்கு தெரிய வந்துள்ளது.

இவ்வளவு விஷயங்களை தாண்டி, பலகோடி ரூபாய் முதலீடு, நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரின் கடின உழைப்போடு ஒரு படத்தை தயாரித்து வெளியிடுகிறோம். அப்படத்தின் தணிக்கை முடிந்த பிறகும், காட்சியை நீக்க வேண்டும் என்பது ஜனநாயக முறைப்படி தவறான விஷயமாகும். இதனை தயாரிப்பாளர் சங்கம் ஒருபோதும் ஆதரிக்காது.

ஒரு திரைப்படத்தை பார்க்கும் பலருக்கும் பலவிதமான கருத்துக்கள் எழலாம். அக்கருத்துக்களை பகிர்வதோடு இருக்கலாமே தவிர, தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்தின் தயாரிப்பாளரை அக்காட்சிகளை நீக்க சொல்வது தவறு.

தணிக்கை சான்றிதழ் செய்யப்பட்ட படத்தை, அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் வற்புறுத்தலுக்காக மீண்டும் தணிக்கை செய்வது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்

இவ்வாறு தயாரிப்பாளர் சங்கம் 'மெர்சல்' படத்திற்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

More News

வேகமாக பரவும் விஜய்யின் வீடியோ

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்திற்கு பாஜக தலைவர்களால் இப்படி ஒரு இலவச விளம்பரம் கிடைக்கும் என்று படக்குழுவினர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

'மெர்சல்' பட விவகாரம்: வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்

விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு குறித்த வசனங்களுக்கு பாஜகவினர் எதிர்ப்பும் மிரட்டலும் தெரிவித்தபோது கோலிவுட் திரையுலகமே கொந்தளித்து

மெர்சலுக்கு மறைமுக ஆதரவு தெரிவித்த மு.க.ஸ்டாலின்

விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்திற்கு எந்த நேரத்திற்கு தமிழிசை செளந்திரராஜன் எதிர்ப்பு தெரிவித்தாரோ தெரியவில்லை, தமிழகத்தில் இருந்த ஒருசில செல்வாக்கும் அந்த கட்சிக்கு தற்போது இல்லாமல் போய்விட்டது.

மெர்சலுக்காக மக்களே குரல் கொடுக்க வேண்டும்: விஜய்சேதுபதி

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு குறித்த வசனங்களை பாஜகவினர் கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் இந்த படம் தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டிருக்காது.

அப்படி போடு: மெர்சலுக்கு ராகுல்காந்தியும் ஆதரவு

ஜிஎஸ்டி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் நூற்றுக்கணக்கான கூட்டங்கள் போட்டு விளக்கினர். கூட்டங்களில் வராத விழிப்புணர்வு ஒரு படத்தில் ஏற்பட்டுவிட்டது என்றால் அதுதான் 'மெர்சல்'