தமிழக அரசின் கேளிக்கை வரி: முதல்வரை சந்திக்கிறார் விஷால்

  • IndiaGlitz, [Monday,July 03 2017]

ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரி பிரச்சனை தொடர்பாக ஒருபக்கம் தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக அமைச்சர்களை சந்தித்து பேசி வரும் நிலையில் இன்னொரு பக்கம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷாலும் இதுகுறித்த நடவடிக்கையில் களமிறங்கியுள்ளார்.

தமிழக தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களை விஷால் சந்தித்து தற்போதைய தமிழ் சினிமாவுலகின் பிரச்சனைகள் குறித்தும் திரைத்துறையினர்களின் அவசிய தேவை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

விஷாலின் கோரிக்கைகள் அனைத்தையும் பரிவுடன் கேட்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ இதுகுறித்து முதல்வருடன் கலந்து பேசி விரைவில் நல்ல முடிவு அறிவிப்பதாக கூறியுள்ளார்.

மேலும் இன்னும் சில நிமிடங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும் விஷால் மற்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சந்திக்கவுள்ளதாகவும், இந்த சந்திப்பின்போது கேளிக்கை வரியை கைவிடும்படி முதல்வரிடம் விஷால் குழுவினர்கள் கேட்டுக்கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சூர்யா-சுதா இணையும் படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல்

சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இவ்வாரம் வெளியாகும் என்றும் இதனையடுத்து டீசர், பாடல்கள் அடுத்தடுத்து வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது...

ஜிஎஸ்டி, கேளிக்கை வரி: மதன்கார்க்கியின் அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் நாடு முழுவதும் ஒரே வரி என்ற அறிவித்துதான் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. ஆனால் ஒருசில மாநிலங்களில் ஜிஎஸ்டி வரி மட்டுமின்றி மாநில அரசின் வரியும் விதிக்கப்படுவதால் இரட்டை வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது....

புளுகுமூட்டை சினேகன், நாட்டாமை நமீதா! பட்டப்பெயர் வைத்து வெளியேறிய அனுயா

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று அனுயா வெளியேற்றப்பட்டார்...

'இவன் தந்திரன்' ஓப்பனிங் வசூல் விபரம்

கவுதம் கார்த்திக், ஆர்ஜே பாலாஜி நடிப்பில் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கிய 'இவன் தந்திரன்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்றது. பொறியியல் கல்லூரி மாணவர்கள் நிலைமையை மிக அழகாக எடுத்து கூறியதால் கடந்த மூன்று நாட்களாக திரையரங்குகளில் மாணவர்கள் மற்றும் இளைஞர்க

'அதாகப்பட்டது மகாஜனங்களே' ஓப்பனிங் வசூல் எப்படி?

பிரபல நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி ஹீரோவாக அறிமுகமாகியுள்ள 'அதாகப்பட்டது மகாஜனங்களே' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியானது...