கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு விஷால் எழுதிய முக்கிய கடிதம்

  • IndiaGlitz, [Sunday,November 26 2017]

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து விஷால் பல அதிரடி நடவடிக்கை எடுத்து திரையுலகில் பல புதுமைகள் செய்து வரும் நிலையில் தற்போது கேபிள் டிவி ஆபரேட்டர்களின் நலனை முன்னிட்டு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:

கேபிள் டிவியை நம்பியிருக்கும் பல ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதரங்களை மேம்படுத்தவும், இடைத்தரகர்கள் இல்லாமல் அச்சமின்றி நேர்மையுடன் சுதந்திரமாக தொழில் செய்யவும், கேபிள் டிவி தொழிலை முறைப்படுத்தி வருமானத்தை பெருக்கவும், தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானித்திருக்கிறது. அதன் முதற்கட்ட நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு கேபிள் டிவி உரிமையாளரையும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நேரடி தொடர்பில் கொண்டு வர முடிவெடுக்கப்பட்டிருக்கின்றது.

இதற்கு தேவையான விண்ணப்பப்படிவம் இதர ஆவணங்கள் மற்றும் தங்கள் சேனலின் மாத சந்தா விபரங்களை பற்றிய தகவல்கள் அறிய கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் மட்டும் தொடர்பு கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். தயாரிப்பாளர் சங்கமும் தங்களை கீழ்க்கண்ட இந்த எண்களில் இருந்து மட்டுமே அழைக்கும்

9790045701
9551402255
9551502255
9551392255

தொடர்பு கொள்ள வேண்டிய நேரம் தினசரி காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை. ஞாயிறு விடுமுறை

தமிழகம் முழுவதும் உள்ள கேபிள் டிவி உரிமையாளர்கள் அனைவரையும் ஒன்றுபட்டு செயல்பட அன்போடு அழைக்கிறோம்

More News

பாம்பை கண்டு படையே நடுங்கும்போது சன்னிலியோன் நடுங்க மாட்டாரா?

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன், முன்னணி நடிகைகளுக்கு இணையாக பிசியாக நடித்து வருகிறார். குறிப்பாக பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி வருகிறார்.

'தல' அஜித் படத்தை தயாரிக்க தயார்: ஹேமாருக்மணி

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தை பிரமாண்டமாக தயாரித்து, சரியான முறையில் புரமோஷன் செய்து நல்ல வெற்றியை அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே

நான் அன்புச்செழியனின் சாதிக்காரன் இல்லை: சீனுராமசாமி

சசிகுமார் உறவினர் அசோக்குமார், கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவருடைய மரணத்திற்கு காரணமான அன்புச்செழியனை போலீஸாரின் தனிப்படைகள் தேடி வருகின்றன

அன்புச்செழியன் மீது இன்னும் பலர் புகார்கள் வரும்: சசிகுமார்

பைனான்சியர் அன்புச்செழியன் மிரட்டலால் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து அவரை தேடி வருகின்றனர்.

இந்த இரண்டு கட்சிகளுடன் கூட்டணி இல்லை: கமல்ஹாசன்

கமல்ஹாசன் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நேற்று டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு விரைவில் கட்சியின் பெயரை அறிவிப்பேன்