தேர்தலுக்கு பின் தயாரிப்பாளர் சங்கத்தின் முதல் பொதுக்குழு கூட்டம்

  • IndiaGlitz, [Tuesday,November 28 2017]

கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் விஷால் அணி அமோக வெற்றி பெற்றது. விஷால் தலைவராகவும், பிரகாஷ்ராஜ், கெளதம் மேனன் ஆகியோர் துணைத்தலைவர்களாகவும், செயலாளராக ஞானவேல்ராஜா அவர்களும், பொருளாளராக எஸ்.ஆர்.பிரபு அவர்களும் வெற்றி பெற்றனர்.

இந்த நிலையில் தேர்தல் முடிவடைந்து புதிய உறுப்பினர்கள் பதவியேற்று சுமார் ஏழு மாதம் காலம் முடிந்துவிட்ட நிலையில் தற்போது முதல் பொதுகுழு கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்தலுக்கு பின்னர் நடைபெறும் இந்த முதல் பொதுகுழு கூட்டம் டிசம்பர் 10ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுக்குழுவில் தயாரிப்பாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பல அதிரடி முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அஜித், விஜய் ஆசானுக்கு கிடைத்த புதிய பதவி

தமிழகர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்று சிலம்பக்கலை. இன்றும் கிராமங்களில் திருவிழாவின்போது சிலம்பச்சண்டை ஒரு முக்கிய பகுதியாக இடம்பெறும்.

இவாங்கா டிரம்புக்கு சமந்தா அளிக்கப்போகும் நினைவு பரிசு

டொனால்ட் டிரம்ப் மகள் இவாங்கா டிரம்ப் ஒருநாள் இந்திய பயணமாக இன்று வருகை தந்துள்ளார். இன்று தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தில் நடைபெறும் உலக தொழில் முனைவோர் மாநாட்டில் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.

ஃபேஸ்புக்குடன் கூட்டணி வைத்தது தேர்தல் ஆணையம்

அரசியல் கட்சிகள் தான் தேர்தல் சமயத்தில் கூட்டணி வைப்பது வழக்கம். ஆனால் தற்போது தேர்தல் ஆணையமே உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்குடன் கூட்டணி வைத்துள்ளது

விஜய், அஜித், சூர்யா குறித்து கார்த்தி கூறியது என்ன?

கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வசூலை அள்ளி கொண்டிருக்கின்றது. நடிகர் கார்த்திக்கு இந்த படம் ஒரு மைல்கல் என்றால் அது மிகையில்லை.

சுரேஷ் ரெய்னாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சச்சின்

சுரேஷ் ரெய்னா நேற்று தனது 31வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு இந்திய அணி வீரர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் நேரிலும், சமூக வலைத்தளங்கள் மூலமும் வாழ்த்து தெரிவித்தனர்.