ஆன்லைன் பைரஸியை சமாளிக்க தயாரிப்பாளர் சங்கத்தின் புது ஐடியா
Send us your feedback to audioarticles@vaarta.com
திரைத்துறையினர் தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையாக ஆன்லைன் பைரஸி உள்ளது. படம் வெளிவந்த மறுநாளே ஆன்லைனில் படம் வெளியாகிவிடுவதால் மிகப்பெரிய அளவில் வசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் ஆன்லைன் பைரஸியை கட்டுப்படுத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் புதிய ஐடியா ஒன்றை தயாரிப்பாளர்களுக்கு தெரிவித்துள்ளது. தற்போது புதியதிரைப்படங்களை உரிமை பெற்று வெளியிட ஒருசில ஆன்லைன் நிறுவனங்கள் தயாராகவுள்ளன. அந்த நிறுவனங்களை தயாரிப்பாளர்கள் பயன்படுத்தி கொண்டால் ஆன்லைன் பைரஸியை தவிர்க்க முடியும் என்று அறிவுறுத்தியுள்ளது.
சமீபத்தில் முன்னணி ஆன்லைன் நிறுவனம் ஒன்றில் வெளியாகியுள்ள ஜோதிகாவின் 'மகளிர் மட்டும்' மற்றும் விஷாலின் 'துப்பறிவாளன்' நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தியேட்டரில் வெளியிடும் உரிமை, தொலைக்காட்சிகளில் வெளியிடும் உரிமை போல ஆன்லைனில் வெளியிடும் உரிமையையும் விற்பனை செய்து தயாரிப்பாளர்கள் கூடுதல் வருமானம் பெறலாம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com