சிசிடிவி கேமிரா இல்லாத தியேட்டர்களுக்கு படம் கிடையாது: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி

  • IndiaGlitz, [Wednesday,October 24 2018]

தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு உள்ள ஒரு பெரிய பிரச்சனை திருட்டி டிவிடி மற்றும் ஆன்லைன் பைரஸி. இந்த இரண்டையும் முற்றிலும் ஒழித்துவிட்டாலே பாதி படங்கள் வெற்றி பெற்றுவிடும். இந்த நிலையில் நேற்று கூடிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஒருசில அதிரடி நிபந்தனைகளை விதித்துள்ளது. அவை குறித்து தற்போது பார்ப்போம்

* தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் நவம்பர் 6க்குள் சிசிடிவி கேமிரா பொருத்த வேண்டும். சிசிடிவி கேமிரா பொருத்தா திரையரங்குகளுக்கு திரைப்படம் தரப்பட மாட்டாது

* திரையரங்குகளில் அனைத்து காட்சிகளிலும் இரண்டு நபர்கள் முழுநேர கண்காணிப்பு பணிக்கு அமர்த்தப்படுவர்

* திரையரங்குகளில் படம் ஆரம்பிக்கும் திருட்டுத்தனமாக வீடியோ எடுப்பது சட்டப்படி குற்றம் என்ற விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்ப வேண்டும்

* பார்வையாளர்களிடம் கேமிரா இருக்கின்றதா? என திரையரங்கிற்குள் நுழையும்போது சோதனை செய்ய வேண்டும்

More News

கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி காலமானார்

சினிமா கலைஞர்கள் உள்பட பலருக்கு வழிகாட்டியாக இருந்த கூத்துப்பட்டறையின் நிறுவனர் ந.முத்துசாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 82

'விஸ்வாசம்' செகண்ட்லுக் வெளியிடும் தேதி - நேரம் அறிவிப்பு

தல அஜித் நடித்து வரும் 'விஸ்வாசம்' படத்தின் வசன படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், இந்த படத்தில் தனது பகுதியின் டப்பிங் பணியை அஜித் முடித்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

பரியேறும் பெருமாளுக்கு பாராட்டு தெரிவித்த இரண்டு பிரபலங்கள்

சமீபத்தில் வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்திற்கு கிடைத்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பாசிட்டிவ் விமர்சனங்களும் அனேகமாக வேறு எந்த படத்திற்கும் கிடைத்திருக்காது

லாஸ் ஏஞ்சலில் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்த பிரபல தமிழ் நடிகை

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானை அவருடைய லாஸ் ஏஞ்சல்ஸ் ஸ்டுடியோவில் பிரபல நடிகையும், உலக நாயகன் கமல்ஹாசன் மகளுமான ஸ்ருதிஹாசன் சந்தித்துள்ளார்.

பிரபுதேவாவுக்கு ஜோடியாகும் பிக்பாஸ் நடிகை

பிரபுதேவா நடித்த 'லட்சுமி' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது 'தேவி 2' உள்பட ஆறு படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள்