'மெர்சல்' இயக்குனர் அட்லிக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்

  • IndiaGlitz, [Friday,November 10 2017]

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய 'மெர்சல்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று திரைக்கு வந்து மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் சென்னை உள்பட உலகம் முழுவதும் வசூலில் சாதனை செய்திருந்தாலும் இந்த படத்தின் கதை கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள்' மற்றும் ரஜினியின் 'மூன்றுமுகம்' படங்களின் காப்பி என்று ஒருசில விமர்சகர்களால் விமர்சனம் செய்யப்பட்டது.

ஆனால் 'அபூர்வ சகோதரர்கள் படத்தை தயாரித்து நடித்த கமல்ஹாசனே 'மெர்சல்' படத்தை பார்த்து விஜய் மற்றும் அட்லியை அழைத்து பாராட்டு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மூன்று முகம் படத்தின் ரீமேக் உரிமத்தை வைத்துள்ள ஃபைவ் ஸ்டார் பிலிம்ஸ் அளித்த புகாரின் பேரில் மெர்சல் படத்தை இயக்கிய அட்லிக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.

இந்த நோட்டீஸ்-க்கு அட்லி என்ன பதில் அளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

'அறம்' போன்ற படங்களுக்கு ஊக்கம் கொடுங்கள்: நடிகை ரேவதி கோரிக்கை

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'அறம்' திரைப்படம் இன்று வெளியாகி சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்று வருகிறது.

மேற்குவங்க முதல்வர் மம்தாவுடன் கமல் இன்று சந்திப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் அரசியலில் குதிக்க ஒவ்வொரு அடியாக கவனமாக எடுத்து வருகிறார். இதற்காக அவர் முக்கிய அரசியல்வாதிகளையும் பிற மாநில முதல்வர்களையும் சந்தித்து ஆலோசனை செய்து வருகிறார்.

பிரபல கவர்ச்சி நடிகையின் தாயார் காலமானார்

குசேலன்', 'குரு என் ஆளு', 'ஒன்பதுல குரு' உள்பட பல படங்களில் நடித்தவரும், 'கனிமொழி' என்ற படத்தை தயாரித்தவர் நடிகை சோனா. இவருடைய தாயார் இன்று அதிகாலை காலமானார்.

'மெர்சலுக்கு' அடுத்து தினகரனை விளம்பரம் செய்கிறது மத்திய அரசு: மயில்சாமி

தற்போது மத்திய அரசே அனைத்து விஷயங்களையும் தானே விளம்பரம் செய்து வருவதாகவும், மெர்சல் விஜய்யை இந்தியா முழுவதும் விளம்பரம் செய்தது போல்

அனிதா பிறந்த மாவட்டத்திற்கு விஜய்சேதுபதி கொடுத்த ரூ.50 லட்சம் நன்கொடை

நடிகர் விஜய்சேதுபதி தனியார் சேமியா நிறுவனம் ஒன்றின் லோகோவை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ரூ.50 லட்சம் நன்கொடை தருவதாக அறிவித்துள்ளார்