டெஸ்லா சோலார் பேனல்கள் உதவியால் உப்புத் தண்ணீரை குடிநீராக்கிக் குடித்த மக்கள்..!

  • IndiaGlitz, [Wednesday,March 04 2020]

ஒரு அரசு சாரா நிறுவனமானது சோலார் பேனல்கள் உதவியோடு உப்பு நீரை தூய்மையான குடிநீராக்கும் திட்டத்தை கென்யாவில் தொடங்கியுள்ளது. இதன் மூலம் 35,000 மக்கள் நல்ல குடிநீர் கிடைத்து அதை பருகி மகிழ்ந்தனர்.

அந்த நீர் நிலையமானது தினமும் அங்குள்ள மக்களுக்கு 20,000 கேலன் தண்ணீர் வழங்கும் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாமல் பேட்டரியால் இந்த நீர் நிலையத்தை இயங்க வைக்க அதிக செலவானது. இப்போது அந்த குறையை டெஸ்லா நிறுவனத்தின் சோலார் பேனல்கள் தீர்த்து வைத்திருக்கின்றன. சூரியனிலிருந்து மின்சாரம் தயாரித்து மக்களுக்கு நல்ல குடிநீர் வழங்குகிறது அந்த அறிவியல் கண்டுபிடிப்பு.

2025-ல் உலகில் பாதி மக்கள் நல்ல குடிநீர் கிடைக்காத இடத்தில் வாழப் போகிறார்கள். இந்த குறையை தீர்க்க நமக்கு சுற்றுசூழல் பற்றிய அக்கறை அதிகமாக வேண்டும். அதுபோக இது போன்ற சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத பல திட்டங்கள் நமக்கு தேவைப்படுகின்றன. இவ்வளவு நாள் உப்பு நீரை குடித்து வந்த கென்ய மக்கள் நல்ல குடிநீர் கிடைத்ததும் அதை கொண்டாடி பருகினர். சென்ற வருடம் இந்த பகுதியில் மோசமான உப்பு நீரைக் குடித்து சிறுநீரகம் செயலிழந்து பல பேர் இறந்து போனார்கள். இதை தடுக்க முடியும் உயிரிழப்பை குறைக்க முடியும் என அந்த அரசு சாரா நிறுவனம் சொல்லியுள்ளது.