கோடி ரூபாய் காரை வெடிவைத்து நொறுக்கிய நபர்… அப்படியென்ன கோபம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகின் மிகப்பிரபலமான மின்சார கார் நிறுவனமான டெஸ்லா காரை பின்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் வெடிவைத்து நொறுக்கியிருக்கிறார். மேலும் இப்போதுதான் நான் நிம்மதியாக இருக்கிறேன் என்று அவர் வெளியிட்ட வீடியோ தற்போது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.
மின்சார கார் உற்பத்தியில் முதலிடம் பிடித்திருக்கும் Space X நிறுவனர் எலான் மஸ்க் தயாரித்த ஒரு காரை 30 கிலோ டைனமைட் வெடிபொருள் வைத்து நொறுக்கியிருக்கிறார் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த தூமன் கடைடென் எனும் வாடிக்கையாளர். பின்லாந்து நாட்டிலுள்ள ymenlaakso எனும் பகுதியில் ஜாலா எனும் கிராமத்தில் வசித்து வருபவர் தூமன் கடைடென். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு டெஸ்லா நிறுவனம் வெளியிட்ட Model S எனும் பிரபலமான காரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு வாங்கியுள்ளார்.
அதிகப் பனி நிறைந்த பகுதியில் வசிக்கும் இவர் 1,500 கிலோ மீட்டர் தூரம் வரையில் தனது காரை நன்றாக இயக்கியிருக்கிறார். அதற்குப் பிறகு கார் நடுவழியில் நின்றதால் மெக்கானிக் கடைக்குக் கொண்டு சென்றுள்ளார். இதையடுத்து பனி காரணமாக காரின் ஒட்டுமொத்த பேட்டரியும் பழுதடைந்துவிட்டது. இதனால் பேட்டரியை மாற்றினால் மட்டுமே காரை இயக்க முடியும் என்று மெக்கானிக் கூறியுள்ளார்.
இதையடுத்து டெஸ்லா நிறுவனத்தின் சேவை மையத்தை தொடர்பு கொண்ட தூமன் டெஸ்லா காருடைய பேட்டரியை குறித்து விசாரித்து இருக்கிறார். அதற்கு 20 ஆயிரம் யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ.17 லட்சம் செலவாகும் எனக் கூறியிருக்கின்றனர். இதைக்கேட்ட தூமன் அதிர்ந்துபோய் எனக்கு இந்த காரே வேண்டாம். இதை நான் கொழுத்தப்போகிறேன் எனக் கூறியுள்ளார். முதலில் மெக்கானிக் கூட இதை சாதாரணமாக நினைத்தாராம்.
ஆனால் 30 கிலோ டைனமைட் வெடிப்பொருளை வைத்து தூமன் தான் வாங்கிய விலையுயர்ந்த காரை கொழுத்திய வீடியோ தற்போது இணையத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டெஸ்லா காரால் கடும் விரக்தியடைந்துவிட்டேன். காரை கொழுத்திய பிறகுதான் நான் நிம்மதியாக இருக்கிறேன் என்று தூமன் கூறியது தற்போது கார் வாடிக்கையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com