இந்தியாவில் பயங்கரவாத அமைப்புகளா??? ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவின் கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளைச் சார்ந்தவர்கள் இருப்பதாக ஐ.நா. சபை அதிர்ச்சி தகவல் வெளியிட்டு இருக்கிறது. ஐக்கிய நாடுகளின் சபை ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல்கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளைப் பற்றிய 26 ஆவது பகுப்பாய்வு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிக்கையில் இந்தியாவிலும் கணிசமான எண்ணிக்கையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் இருக்கின்றனர் என்று கூறப்பட்டு இருக்கிறது.
தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடு, தனிநபர், நிறுவனங்கள் போன்றவற்றைப் பற்றிய ஐ.நாவின் அறிக்கையில் இந்தியா, மியான்மர், பாகிஸ்தான், வங்காள தேசம் போன்ற நாடுகளில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் இருக்கின்றனர் எனக் கூறப்பட்டு இருக்கிறது. அவர்களின் எண்ணிக்கை 150-200 ஆக இருக்கலாகம் எனவும் அந்த அறிக்கை தெரிவித்து இருக்கிறது. ஆப்கானிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டு நிம்ஜிஸ், ஹெக்மண்ட கந்தவார், தாலிபான் போன்ற மாநிலங்களில் இருந்து அதன் உறுப்பினர்கள் மற்ற நாடுகளுக்கு அனுப்பப் பட்டு இருப்பதாகவும் ஐ.நா. அறிக்கையில் எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.
அல்கொய்தா அமைப்பின் தற்போதைய தலைவர் ஒசாமா மெமூத் முன்னாள் தலைவரான அசிம் உமர் கொலைக்கு பழிவாங்க முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. இத்திட்டத்திற்காக பல உறுப்பினர்கள் தற்போது தெற்காசிய நாடுகளுக்கு அனுப்பப் பட்டுள்ளனர் எனவும் அந்த அறிக்கை தகவல் தெரிவிக்கிறது. ஏற்கனவே காஷ்மீர் விவகாரம் வெடித்தபோது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இந்தியாவில் அதன் துணை இயக்கத்தைத் தொடங்கியிருப்பதாகவும் அதில் 180-200 உறுப்பினர்கள் இருக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பு கிளம்பியது. தற்போது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பினைச் சார்ந்தவர்கள் இந்தியாவின் கேரளா மற்றும் கர்நாடகப் பகுதியில் இருப்பதாக ஐ.நா. கடுமையாக எச்சரித்திருப்பதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments