உத்திரகாண்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு: உயிரிழப்பு அதிகரிக்குமோ என அதிகாரிகள் அச்சம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில தினங்களாக உத்திரகாண்ட் மாநிலத்தில் கடுமையான மழை பொழிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்திரகாண்டின் சில பகுதிகள் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. பித்தோரகர் என்ற பகுதியில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவினால் இதுவரை 6 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும் எனவும் அப்பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தகவல் தெரிவித்து உள்ளனர்.
6 உயிரிழப்புகளைத் தவிர 11 பேர் காணாமல் போயுள்ளனர் என அப்பகுதியின் மாவட்ட நிர்வாகம் சார்பில் கூறப்படுகிறது. இதனால் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் பல குழுக்களாகப் பிரிந்து தற்போது தேடுதல் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. பித்தோரகர் மற்றும் அல்மோரா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்குமோ என்ற அச்சத்தையும் அதிகாரிகள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments