பேங்க் லாக்கருக்கே இந்த நிலமையா? அதிர்ச்சி சம்பவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
குஜராத் மாநிலத்தின் வதோரோ நகரில் உள்ள ஒரு பேங்க் லாக்கரில் அதன் பயனாளி ஒருவர் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை பத்திரமாக வைத்து உள்ளார். அவசர தேவைக்காக வைக்கப்பட்டு இருந்த அந்த பணத்தை அதன் ஊழியர்களுக்கே தெரியாமல் கரையான்கள் அரித்து சாப்பிட்டு இருக்கிறது. இதை அறிந்த அந்த பயனாளி பதறிப்போய் இருக்கிறார். மேலும் உங்கள் பொறுப்பில் வைக்கப்பட்ட அந்தப் பணத்திற்கு நீங்கள்தான் பொறுப்பு, எனவே உரிய தொகையை திரும்ப வழங்க வேண்டும் என அந்த வங்கியிடம் கோரிக்கை வைத்து இருக்கிறார்.
வதோராவின் பிரதாப் சாலையில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா வங்கியில்தான் இந்தச் சம்பவம் நடைபெற்று இருக்கிறது. பொதுவாக பேங்க் லாக்கரில் ஆவணங்கள் மற்றும் தங்கம், வைரம் போன்ற விலையுயர்ந்த பொருட்களை வைக்கிறோம். பாதுகாப்பு காரணங்களுக்காக பேங்க் லாக்கருக்கு பணம் செலுத்தி வாடிக்கையாளர்கள் தங்களுடைய பொருளை வைத்து வருகின்றனர். இப்படி வைக்கும் பொருட்களுக்கே பாதுகாப்பு இல்லாமல் போனால் அதை என்னவென்று சொல்வது.
இந்த நிலைமைதான் குதுபுதீன் தேசர்வால் எனும் நபருக்கு ஏற்பட்டு இருக்கிறது. அவசரத் தேவைக்காக வைக்கப்பட்டு இருந்த ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை இழந்து இருக்கிறார். இதனால் தன்னுடைய பணத்தைத் திரும்ப கொடுக்குமாறு அந்த வங்கி மேலாளருக்கு அவர் கோரிக்கை வைத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments