அமெரிக்க அதிபர் தேர்தலில் நிலவும் இழுபறி… வெற்றி பாதைக்கு செல்வது யார்???

 

அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதற்கான விடை தெரிய இன்னும் சில தினங்கள் ஆகலாம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. காரணம் கடைசி ஓட்டு எண்ணி முடிக்கும் வரை யார் அடுத்த அதிபர் என்பதை முடிவு செய்ய முடியாத வகையில் கடுமையான இழுபறி நிலவி வருகிறது. இதற்கிடையில் 3 மாகாணங்களுக்கான தேர்தல் வாக்குகளை எண்ணக்கூடாது என்றொரு வழக்கை நீதிமன்றத்தில் டிரம்ப்பின் குடியரசு கட்சியினர் தொடுத்து இருக்கின்றனர். இதனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் தொடர்ந்து இழுபறி நீடிக்கும் எனக் கூறப்படுகிறது.

வாஷிங்டன், நியூயார்கள், நியூஜெர்சி, கலிபோர்னியா, கொலம்பியா உள்ளிட்ட 15 மாகாணங்களில் ஜோ பைடன் அபாரமான வெற்றிப் பெற்றுள்ளார். அதேபோல அலபாமா, அர்கன்சாஸ், இடாகோ, கென்டக்கி, ஒக்லா உள்ளிட்ட 13 மாகாணங்களில் டிரம்ப் பெரிதாக வெற்றிப் பெற்றுள்ளார். இதைத்தவிர 10 மாகாணங்களில் ஜோ பைடன் தேவையான வாக்குகளுடனும் 7 மாகாணங்களில் டிரம்ப் குறுகிய வித்தியாத்துடன் வெற்றி பெற்றுள்ளனர். இதற்கிடையே பெரும்பாலான மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கையில் பெரிய வித்தியாசம் இல்லை என்றே கூறப்படுகிறது.

ஏற்கனவே சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை குறுகிய வித்தியாசத்துடன் இருப்பதால் மீதமுள்ள இடங்களைக் குறித்து கணிக்க முடியாத நிலைமை உருவாகி இருக்கிறது. இன்று காலை வரை உள்ள நிலவரப்படி ஜோ பைடன் 264 தொகுதியிலும் அதேபோல டிரம்ப் 214 இடங்களிலும் வெற்றிப் பெற்றுள்ளனர். அந்நாட்டு நிலைமையைப் பொறுத்த வரையில் மொத்த இடங்கள் 538. அதில் பெரும்பான்மை 270. இதையும் தாண்டி தேர்தல் குழுமம் யாருக்கு சாதகமாக இருக்கப் போகிறது என்பதற்கான நிலவரங்கள் இன்னும் தெரியவில்லை. இந்த நிலவரம் தெரியவர இன்னும் சில நாட்கள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே குடியரசு கட்சியின் வேட்பாளர் டிரம்ப், தான் வெற்றிப் பெற்றுவிட்டதாக அறிவித்தார். அதோடு நிறுத்திக் கொள்ளாமல் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்கும்படி தேர்தல் குழுவிற்கு அழுத்தம் கொடுக்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம் 2020 அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியினர் மோசடி செய்து வெற்றிப் பொற்று விடுவார்கள். அதனால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கூறுகிறார். மேலும் 3 மாகாணங்களுக்கான வாக்கு எண்ணிக்கையை எண்ணக்கூடாது என நீதிமன்றத்திலும் வழக்கை தொடுத்து இருக்கிறார்.

டிரம்ப்பின் இத்தயை அதிரடி செயல்பாடுகளைப் பார்த்து மக்கள் கடும் குழப்பத்திற்கு ஆளாகி இருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும். இதற்கு முன்னதாக ஒபாமா 2 முறை அமெரிக்க அதிபர் பதவியில் நீடித்தார். அதேபோல டிரம்ப் தன்னாலும் நீடிக்க முடியும் என்ற அபாரமான நம்பியுக்கையுடனே இருந்து வருகிறார். ஆனால் தற்போதைய நிலைமையைப் பொறுத்த வரையில் ஜோ பைடன் முன்னிலை பெற்று இருக்கிறார்.

இதற்கிடையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜோ பைடன் பொறுமையாக இருப்போம் நாம்தான் வெல்கிறோம் என்று நம்பிக்கையுடன் பேசுகிறார். ஆனால் டிரம்ப் தொடர்ந்து அதிரடியையே காட்டி வருகிறார். தற்போதும் கூட தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை. மோசடி செய்து வெற்றி பெற்றுவிட்டார்கள் எனத் தொடர்ந்து அறிக்கை விடுகிறார்.

இந்நிலையில் குடியரசு கட்சி சார்பாக தொடுக்கப் பட்டுள்ள வழக்கை 9 நீதிபதிகள் விசாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அதில் 6 பேர் டிரம்ப்பின் குடியரசு கட்சியை சார்ந்தவர்கள் என்றும் 3 பேர் ஜனநாயகக் கட்சியைச் சார்ந்தவர்கள் என்றும் தகவல் கூறப்படுகிறது. வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் நியாயத்தை மீறி ஒருதலைப் பட்சமாக நீதி வழங்கமாட்டார்கள் என நம்பினாலும் இந்த வழக்கில் என்ன ஆகுமோ என்ற பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

More News

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ராஜதந்திரம்… அடுத்த சட்டச்சபையும் அவருக்கே…

தமிழகத்தில் வருகிற மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் அடுத்த முறையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே ஆட்சியைப் பிடிப்பார்

மன்மத ராசா.. லூசுப்பெண்ணே: காதல் ஜோடியை வச்சு செய்யும் ஹவுஸ்மேட்ஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை கொண்டு சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒரு பக்கம் போட்டியாளர்களின் சண்டை சச்சரவு இருந்தபோதிலும்

குறும்படம்: ஆரியிடம் வசமாக சிக்கிய பாலாஜி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்றவர்களை உசுப்பேத்தி தனது தந்திரத்தை பயன்படுத்தி கடந்த சில நாட்களாக பாலாஜி விளையாடி வருகிறார் என்பது கண்கூட தெரிகிறது. பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்கில்

நீதிமன்றமா? கருத்துக்கணிப்பு மன்றமா? சுசித்ராவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக நீதிமன்ற டாஸ்க் நடந்து கொண்டிருக்கும் நிலையில் வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதி சுசித்ரா, நீதிபதியா? அல்லது கருத்துக்கணிப்பு நடத்தும்

ஆரவ் திருமணம் குறித்து முதல்முறையாக மனம்திறந்த ஓவியா!

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் டைட்டின் வின்னரான ஆரவ்வுக்கு சமீபத்தில் நடிகை ராஹே என்பவருடன் சிறப்பாக திருமணம் நடந்தது