பிரபல நடிகையுடன் டேட்டிங் செல்லும் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்!

  • IndiaGlitz, [Saturday,August 21 2021]

பிரபல நடிகை ஒருவருடன் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் டேட்டிங் செய்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் இது குறித்த புகைப்படங்களும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திரையுலகைச் சேர்ந்தவர்களும் விளையாட்டு நட்சத்திரங்களும் அவ்வபோது டேட்டிங் செய்து கொள்வதும் அதன்பின்னர் திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வுகளையும் நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் பாலிவுட் நடிகை கிம் சர்மா உடன் டேட்டிங்கில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இருவரும் கோவாவில் உள்ள ரிசார்ட் ஒன்றில் ஓய்வை கழிக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவாவில் உள்ள பவுசடா என்ற பீச்சில் உள்ள தனியார் ரிசார்ட்டில் இருவரும் தங்கி இருப்பது போன்றும், இருவரும் ரொமான்ஸ் உடன் கட்டியணைத்து போஸ் கொடுப்பது போன்ற புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகை கிம்சர்மாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் காதலில் விழுந்து உள்ளதை உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து லியாண்டர் பயஸ் மற்றும் கிம்சர்மா ஆகிய இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மருமகள் மீது பேராசை.....! மாமனார் கொலையான கொடூரம்...!

பாலியல் தொல்லை கொடுத்து வந்த மாமனாரை,  மருமகள் விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்சயகுமாரின் 'பெல்பாட்டம்' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இன்னும் திரையரங்குகள் திறக்காத போதிலும் திரை அரங்குகள் திறந்த ஒருசில மாநிலங்களில் மட்டும் வெளியான அக்ஷய் குமாரின் 'பெல்பாட்டம்' திரைப்படம்

லைகா கொடுக்கும் ரூ.5 லட்சம் அபராதத்தொகையை இதற்கு செலவு செய்ய போகிறேன்: விஷால்

'சக்ரா' பட வழக்கு சம்பந்தமாக லைகா நிறுவனம் நீதிமன்றத்தை அணுகிய நிலையில் பொய்யான வழக்கை பதிவு செய்ததாக லைகா நிறுவனத்திற்கு ரூ 5 லட்சம் அபராதம் விதித்து சமீபத்தில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது

செப்டம்பர்-1-இல் பள்ளிகள் திறக்கப்படும்....! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதி....!

வருகின்ற செப்டம்பர்-1 ஆம் தேதி  திட்டமிட்டதன் பேரில், தமிழகத்தில் உள்ள பள்ளிகள் திறக்கப்படும்

ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கிய நயன்தாரா: வைரல் வீடியோ

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பாண்டிச்சேரியில் படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது