ஸ்ரீதேவி மறைவிற்கு சச்சின் உள்பட விளையாட்டு பிரபலங்கள் இரங்கல்

  • IndiaGlitz, [Sunday,February 25 2018]

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மறைவு திரையுலகை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்பது ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் தெரிவித்த இரங்கல்களில் இருந்து தெரிய வருகிறது. இந்த நிலையில் பிரபல விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளும் ஸ்ரீதேவி மறைவிற்கு தங்கள் அதிர்ச்சியினை தெரிவித்துள்ளனர்.

சச்சின் தெண்டுல்கர்: ஸ்ரீதேவியின் மரணம் உண்மையிலேயே சோகமாக இருக்கிறது. நான் இன்று கண்விழித்ததும் இதுகுறித்து கேள்விப்பட்டபோது மிகவும் சோகமாக இருந்தது. நாங்கள் எல்லோரும் அவரை பார்த்து பார்த்து வளர்ந்தோம். அவர் இனி எல்லை என்பதை ஜீரணிக்கவே முடியவில்லை. அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

பி.வி.சிந்து: ஒரு மிகப்பெரிய வருத்தமான மற்றும் அதிர்ச்சி தரும் செய்தி. ஸ்ரீதேவியின் குடும்பத்தினர்களுக்கு எனது இரங்கல்கள்

விவிஎஸ் லட்சுமண்: மிகவும் திறமைசாலி நடிகையான ஸ்ரீதேவியின் மறைவு செய்தி அதிர்ச்சி அளிக்கின்றது. அவரது குடும்பத்தினர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கல்கள். அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்

சாய்னா நேஹல்: உங்களை நாங்கள் மிகவும் மிஸ் செய்கிறோம் மேடம்.

விரேந்திர சேவாக்: ஸ்ரீதேவியின் மரணம் எனக்கு தாங்க முடியாத அதிர்ச்சி அளிக்கின்றது. அவரது குடும்பத்தினர்களுக்கு எனது இரங்கல்கள். ஓம் சாந்தி