அற்புதமான பந்துவீச்சு… தமிழக வீரர் நடராஜனை பராட்டி மகிழும் சச்சின்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தமிழக வீரர் நடராஜன் அற்புதமாக பந்து வீசினார் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாரட்டி இருக்கிறார். மேலும் இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீச வேண்டும் என்றும் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா ஏ அணியுடனான பயிற்சி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பந்து வீச்சாளர்கள் அசத்தலாக பந்து வீசி உள்ளதாகவும் பாராட்டினார். கொரோனாவுக்கு பிறகு நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் பந்துகளில் எச்சில் பயன்படுத்தக்கூடாது என்ற விதி பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைகிறது என்றும் அவர் கருத்து கூறியிருக்கிறார்.
முன்னதாக ஐபிஎல் 2020 இல் கிரிக்கெட் போட்டிகளில் தனது அபாரமான பந்து வீச்சுகளை வெளிப்படுத்தினார் என தமிழக வீரர் நடராஜன் புகழப்பட்டார். சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியில் விளையாடிய இவர் துல்லியமான யாக்கர் மற்றும் தரமான பந்து வீச்சின் காரணமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 16 போட்டிகளில் பந்துவீசி 16 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதன் காரணமாக ஆஸ்திரேதலியாவிற்கு எதிரான டி20 போட்டிகளில் விளையாட வாய்ப்பை பெற்றார்.
அடுத்து ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி பங்குபெறும் ஒன்டே மேட்சில் விளையாட வாய்ப்பு பெற்றார். இறுதி மேட்சில் வாய்ப்பு கிடைக்கப் பெற்ற நடராஜன் தனது முதல் சர்வதேச போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். அந்த போட்டியில் இவரது பந்துவீச்சு அபாரமாக இருந்தது எனப் பலரும் பாராட்டினார்.
இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 போட்டிகளில் விளையாடிய இவர் முதல் போட்டியில் 3 விக்கெட் அடுத்த போட்டியில் 2 விக்கெட் என தொடர்ந்து தனது பந்து வீச்சில் அதிரடி காட்டினார். இறுதி போட்டியின் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்ட ஹர்திக் பாண்டியா இவ்விருது நடராஜனுக்குத்தான் பொருத்தமானது எனக் கூறி கோப்பையை நடராஜனுக்கு வழங்கி கவுரவித்தார். அதைத் தொடர்ந்து இந்தியாவின் சாம்பியன் கோப்பையை வாங்கிய கேப்டன் கோலி நடராஜன் கையில் கொடுத்து அழகுபார்த்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout