கடலூர் தியேட்டரில் இளநீர் விற்பனை. ஆரம்பம் ஆனது விழிப்புணர்ச்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
மாணவர்கள் மற்றும் இளைஞர்களில் ஜல்லிக்கட்டு போராட்டத்தால் ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியது மட்டுமின்றி மறைமுகமாக பொதுமக்களுக்கு பல விழிப்புணர்ச்சிகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நம்முடைய நாட்டின் நிலத்தடி நீரை உறிஞ்சி அதில் கலர்ப்பொடியும் சர்க்கரையும் கொஞ்சம் விஷத்தையும் கலந்து பெரும் லாபத்துடன் கொள்ளை அடித்து வந்தன வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்கள்.
இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இதற்கான விழிப்புணர்வை மாணவர்கள் ஏற்படுத்தினர். இதன் காரணமாக பல இடங்களில் வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனை வெகுவிரைவில் முடிவுக்கு வரவுள்ளது.
இந்நிலையில் கடலூரில் உள்ள ஒரு திரையரங்கு உரிமையாளர் வெறும் பேச்சாக இல்லாமல் தனது திரையரங்கில் முற்றிலும் வெளிநாட்டு பானங்களை தவிர்த்துவிட்டு, நம்முடைய கலாச்சார பானமான இளநீர் மற்றும் மோர் ஆகியவற்றை விற்பனை செய்து செயலில் இறங்கியுள்ளார்.
இதுகுறித்து அந்த திரையரங்க உரிமையாளர் கூறியபோது, 'ஒவ்வொரு விவசாயிக்கும் இதன் பிரதிபலன் சென்று அடையும். பொதுமக்கள் இதற்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்தால் நம் நாட்டு விவசாயிகள் அனைவரும் பலன் அடைவர். விவசாயம் மேலும் அதிகரிக்கும்' என்று கூறியுள்ளார்.
இதேபோன்று தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளிலும் வெளிநாட்டு பானங்களை தவிர்த்து இளநீர், மோர், போன்ற பானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருப்பதோடு, மாணவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த போனஸ் வெற்றியாகவும் இது கருதப்படும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments